நவராத்திரியில் வெளிவருகிறார் வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் தற்பொழுது நடித்துக்கொண்டு இருக்கும் படம் 'வேலைக்காரன்'. இந்தப் படம் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி சரஸ்வதி பூஜை அன்று வெளிவரும் என்று அறிவித்திருக்கின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!