‘வாழ்நாள் கதாபாத்திரம்’

வெளியான முதல் நாளே நூறு கோடி ரூபாய் வசூல் என்றால், எந்த தயாரிப்பாளர்தான் உற்சாகத்தில் மிதக்கமாட்டார். 'பாகுபலி'யின் பிரமாண்ட வெற்றி இதன் தயாரிப்பாளர், இயக்குநர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த படக் குழுவினரையும் மகிழ்ச்சி வானத்தில் மிதக்க வைத்துள்ளது. படம் பார்த்த அனைவருமே முக்கிய வேடங் களை ஏற்றுள்ள பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட் டோரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் தான் ஏற்றிருந்த தேவசேனா கதாபாத்திரமானது தனது திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று எனக் கூறியுள்ளார் அனுஷ்கா.

"எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்பது கதையின் முக்கியத் திருப்பங்களுடன் அதிகம் பின்னிப்பிணைத்திருக்கிறது. எனக் கும் சரித்திரக் கதாபாத்திரங்களுக்குமான பந் தம் தொடரும் என்றுதான் 'பாகுபலி' எனக்கு உணர்த்துகிறது. "தேவசேனா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. அது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். இரண்டாம் பாகத்தில் அதற்கான முக்கியத்துவம் அதிகம். "முதல் பாகத்தில் பிரபாசின் தாயாகவும் இரண்டாம் பாகத்தில் ஜோடியாகவும் நடிப்பது குறித்து நானே பல முறை அவரிடம் நகைச் சுவையாகப் பேசியிருக்கிறேன். அவரைக் கிண் டல் செய்திருக்கிறேன். எங்களுக்கு இடையே யான காதல் காட்சிகளும் அழகாக அமைந்துள் ளன. ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!