தனுஷ்: படம் இயக்க அவசரப்படவில்லை

'பவர் பாண்டி' பெற்றுள்ள வசூ லும் வரவேற்பும் அதன் இயக்குநர் தனுஷை உற்சாகத்தில் மிதக்க வைத்துளள்து. இப்படத்தின் அடுத்த பாகமும் வர வேண்டும் என விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் தனக்கும் அத்தகைய எண்ணம் இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். 'பவர் பாண்டி'யின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவது உறுதி என்றும் அதே சமயம் இவ்விஷயத்தில் அவசரம் காட்டப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "திரைப்படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அதற்கான வாய்ப்பு அமையும் போது சாதித்துக்காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். அதற்கு முன்பு இயக் கம் தொடர்பான நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ப தற்காகவே 17 குறும்படங்களை இயக்கினேன். அதன் பிறகு படம் இயக்க முடிவு செய்து கதை எழுதினேன். "'பவர் பாண்டி' திரைக் கதையை எழுதி முடித்தபிறகு நாயகனாக நடிக்க எனது எதிர் பார்ப்பின்படி ஒருவரும் கிடைக்க வில்லை. அக்கதாபாத்திரத்துக்கு என ஒருவரைத் தேர்ந்து எடுப்பது கடினமாக இருந்தது.

'பவர் பாண்டி' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!