‘நிறைய சம்பாதிக்கவில்லை’

இதுவரையிலான தமது திரையுலகப் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை என்கிறார் இளம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது முன்னணி நாயகிகளின் பட்டியலில் இவர் பெயரும் சேர்ந்துள்ளது. விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்', தனு‌ஷுடன் 'வட சென்னை' படங்களில் நடிக்க ஒப்பந் தமாகியுள்ள நிலையிலும், சிறிய ரக காரையே பயன்படுத்துகிறாராம். பல படங்களில் நடித்திருந்தாலும், ஐஸ்வர் யாவுக்கு இன்னும் கூட சொந்த வீடு இல்லை. காரணம் தாம் இன்னும் கைநிறைய சம்பாதிக்கவில்லை என்கிறார்.

"பல படங்களில் நடித்துவிட்டதாலேயே, கோடிகளில் புரள்வதாகக் கருதிவிடக் கூடாது. மோசமான கதையுடன் வரும் தயாரிப் பாளர் லட்சக்கணக்கில் அள்ளிக்கொடுக்க தயார் என்பார். இன்னொரு பக்கம் நல்ல கதை அமைந்தாலும், தயாரிப்பாளரால் நல்ல சம்பளம் கொடுக்க முடியாத நிலை காணப்படும். "அத்தகைய தருணங்களில் கதையா? பணமா? என்ற கேள்வி எழும்போது, நான் நல்ல கதைகளையே தேர்வு செய்து வந்திருக்கிறேன். அதனால்தான் நல்ல நடிகை எனும் பெயர் கிடைத்திருக்கிறது. "நான் முதன் முதலாக சம்பாதித்த பணம் 225 ரூபாய். பள்ளியில் படித்தபோது ஒரு பேரங்காடியில் விற்பனைக்கு வந்துள்ள புதிய பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பணி.

"அடுத்து பிறந்த நாள் நிகழ்வுகளை வழிநடத்தும் பணியைச் செய்தேன். பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களில் நடித்தால் நல்ல பணம் கிடைக்கும் எனச் சிலர் கூறினர். அதற்கும் முயன்றேன். ஆனால் ஆயிரம் ரூபாய்தான் கிடைத்தது. "பிறகுதான் ஓர் உண்மை புரிந்தது. சினிமாவில் நடித்தபின் சின்னத்திரைக்கு வரும் பிரபலங்களுக்கு மட்டுமே பல ஆயிரங் களை அள்ளிக்கொடுத்தனர். இதைக் கண்ட பிறகே சினிமாவில் நடிப்பதென முடிவு செய்தேன்.

"வாய்ப்பு கேட்டு நான் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை. பல்வேறு வகையிலும் அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன். நடிகைகளைத் தேர்வு செய்யும் நிகழ்வுகளுக் குச் செல்லும்போது காலை 6 மணிக்கே வரச் சொல்லி, 10 மணி வரை காத்திருக்க வைப் பார்கள்.

"ஒருமுறை பேனாவும் நோட்டு புத்தகமும் கொண்டு வர மறந்ததால் நடிப்புப் பயிற்சிக்குச் சென்ற என்னை வெளியே துரத்தினார்கள். நடிப்பு ஒத்திகை முடியும் வரை, நீதான் கதாநாயகி என்பர். ஆனால் படப் பூசையின் போது வேறு ஒருவரை நாயகியாக அறிமுகம் செய்வார்கள். இப்படிப்பட்ட அனுபவங்களைக் கடந்து வந்திருக்கிறேன்."

சில வருட திரை வாழ்க்கையில் 'காக்கா முட்டை' படத்தில் நடித்த பின் வந்த ஓராண்டு காலம்தான் மிகக் கடினமான காலகட்டம் என்கிறார் ஐஸ்வர்யா. திறமையான நடிகை எனப் பெயர் வாங்கியபோதும், அச் சமயம் ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லையாம். "எனினும் 'காக்கா முட் டை'யைப் பார்த்த பிறகே இந்தி திரையுலகில் நடிக்க அழைத் தனர். பலத்த போட்டிகளுக்கு மத்தியில் அந்த வாய்ப்பு கிடைத்தது. எனவே முதல் இந்திப் படம் விரைவில் வெளியாகும்."

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!