சுடச் சுடச் செய்திகள்

காதலரின் வாழ்த்து; நெகிழ்ந்த அஞ்சலி

அஞ்சலியும் நடிகர் ஜெய்யும் எப்போது திருமணம் செய்வார்கள்? என்பது தெரியவில்லை. ஆனால் நாளுக்கு நாள் இருவரது காதலும் மென்மேலும் நெருக்கமடைந்து வருகிறது. இந்நிலையில் தன் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நெகிழ வைத்துள்ளார் ஜெய். தனது டிவிட்டர் பதிவொன்றில், “எனக்கு நீங்கள் எவ்வளவு விசேஷமாக இருக்கிறீர்களே அதேபோல இந்த பெரிய நாளும் உங்களுக்கு விசேஷமாக அமையட்டும்.

“நீங்கள், நீங்களாக இருப்பதன் மூலமே என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக ஆக்குகிறீர்கள். நானும், கடவுளும் எப்போதும் உங்களுடன் இருப்போம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவைப் படித்து நெகிழ்ந்துபோன அஞ்சலி, தன் காதலருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணைந்து நடித்து, பெரும் வரவேற்பு பெற்ற இணை ஜெய்=அஞ்சலி. அதனைத் தொடர்ந்து தற்போது ‘பலூன்’ படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.