லெனின் பாரதி: இது என் மண்ணின் கதை

“ஒரு நல்ல படம் என்பதை அதைப் பார்க்கும் அனுபவத்தோடு முடிந்துவிடக் கூடாது. திரை யரங்கை விட்டு வெளியே வந்த பிறகும், படம் பார்த்தவர் மனதில் தொடர்ந்து வளர வேண்டும். கஷ்டப்படும் மக்களை நோக்கி ஒரு புன்னகை, புரிந்துகொள்ளல், ஒரு கைப்பற்றுதலாவது அந்த ரசிகரிடம் இருந்து வெளிப்பட வேண்டும். இதுவே என் ஆசை,” என்கிறார் அறிமுக இயக்குநர் லெனின் பாரதி. இவரது இயக்கத்தில் உருவாகி யுள்ள படம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுப் பெற்ற பெருமை கொண்ட படம்.

தன் படத்தில் கேளிக்கைகளுக் கும் வேடிக்கைகளுக்கும் சிறிதும் இடமில்லை என்று திட்டவட்டமா கச் சொல்கிறார் லெனின் பாரதி. பிறகு, இப்படத்தில் வேறென்ன தான் இருக்கும்? “தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம், அங்குள்ள மக்களின் ஆசைகள், கனவுகள், அவர்களை ஆட்டிப் படைக்கும் அரசியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியுள் ளது என் முதல் படம். கூடுமான வரை பிரசாரத்தைத் தவிர்த் திருக்கிறேன்.

“இங்கே மலை தாண்டி கூலி வேலைக்காக கேரளாவின் எஸ் டேட் பகுதிகளுக்குச் செல்பவர்க ளின் எண்ணிக்கை அதிகம். அங்கேயும் குளிர், அட்டைப்பூச்சி, முதலாளி இம்சை எனப் பல பிரச்சினைகள் உள்ளன. ஓர் இயக்குநராக நான் பிறந்த இந்த மண்ணின் கதையைச் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது. அதைத் தான் செய்திருக்கிறேன்.” இப்படத்தைத் தயாரித்திருப்பது நடிகர் விஜய் சேதுபதி. கதையைக் கேட்டதும் தானே நடிப்பதாகக் கூறினாராம்.

ஆனாலும், அவர் வேண்டாம் என உடனுக்குடன் வெளிப்படையாகக் கூறிவிட்டாராம் லெனின். ஏனெனில், சேதுபதியின் உடல்வாகு தன் கதைக்கு ஒத்து வராது என்பதுதான். “கூலி வேலை செய்பவர்களின் உடல் இறுகி, குறுகியிருக்கும். சேதுபதி போன்ற பெரிய நடிகர்க ளின் பிம்பம், என் கதையைக் கெடுத்துவிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதனால்தான் அவர் வேண்டாம் என முடிவெடுத்தேன். “பெரும்பாலும் இந்த ஊர் மக்கள்தான் நடித்துள்ளனர். இப் படம் ரசிகர்கள் மனதைத் தொடும்,” என்கிறார் லெனின்.

‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது. 

15 Oct 2019

‘எனக்கு சவாலான படமாக இருந்தது’