‘143’ இளையர்களைக் கவரும்: இயக்குநர் ரி‌ஷி நம்பிக்கை

இளையர்களைக் கவரும் வகையில் தயாராகி வரும் புதிய படம் ‘143’. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பயன்படும் குறியீடாகக் கருதப்படுகிறது ‘143’. எனவே, இதையே படத்தின் தலைப்பாக வைத்தால் இளையர் களுக்கு உற்சாகம் அளிக்கும் என்று கணக்கிட்டு இம்முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார் இயக்குநர் ரி‌ஷி. இந்தப் படத்தின் நாயகனும் இவர் தான். இவருக்கு பிரியங்கா, ஷர்மா நட்சத்திரா என இரு ஜோடிகள். “இன்றைய தலைமுறை இயக்குநர் களால் கண்டு கொள்ளப்படாத தலைப்பு இது. ஆனால் இளசுகள் மத்தியில் இதற்குள்ள வரவேற்பை நான் நன்கறிவேன்,” என்று சொல்லும் ரி‌ஷி, ‘143’யின் கதையையும் எழுதி உள்ளார். விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனராம்.

மேலும், சுதா ராஜ சிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லை சிவா உள்பட பலர் நடிக்கி றார்கள். சதீஷ் சந்திரா பாலேட் அழுத்தமான வேடத்தில் தோன்றுகிறார். விஜயபாஸ்கர் இசையமைக்க, சதீஷ் சந்திரா தயாரிப்பில் உருவாகிறது இப்படம். “அமாவாசை அன்று பிறந்த நாயகன், பௌர்ணமி அன்று பிறந்த நாயகி. இவர்கள் இருவரும் காதலிக்கி றார்கள். இந்தக் காதலுக்கு ஒருவன் வில்லனாக முளைக்கிறான். “இப்படி மூன்று கதாபாத்தி ரங்களின் ஓட்டத்தை வைத்தே திரைக் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கும்.

காதலர்கள் இருவரும் எப்படியாவது ஒன்று சேரவேண்டும் எனும் தவிப்பு ரசிகர்கள் மத்தியில் தோன்றினால் அதையே திரைக் கதைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவேன். நிச்சயம் ரசிகர்கள் மனதில் இப்படியொரு எண்ணம் தோன்றும். எனவே, இந்தப் படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. “ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்துள்ளது. விரைவில் இப்படம் திரைகாணும்,” என்கிறார் ரி‌ஷி.

‘143’ படத்தில் இடம்பெறும் காட்சியில் ரி‌ஷி, பிரியங்கா

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது. 

15 Oct 2019

‘எனக்கு சவாலான படமாக இருந்தது’

கடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவருகிறார் சசிகுமார். படம்: ஊடகம்

15 Oct 2019

கடனை அடைக்க 8 படங்களில் இடைவிடாது நடிக்கும் சசிகுமார்