அம்மா வேடத்தில் நடிக்கும் பிரபல கதாநாயகிகள்

ஒரு பெண் குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார் அமலா பால். அவரைத் தொடர்ந்து மற்ற பல கதாநாயகிகளும் அம்மா வேடத்தில் நடிப்பதற்கு துணிந்துள்ளனர். அரவிந்த்சாமி கதாநாயக னாக நடித்துவரும் ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் அவருக்கு மனைவியாகவும் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாகவும் நடிக்கிறார் திரிஷா. அதேபோல் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் காவல்துறையில் நடிக்கும் நயன்தாராவும் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறார். இந்நிலையில் கமலுடன் ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ படங்களில் கதாநாயகியாக நடித்த பூஜாகுமார், தற்போது தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் கதாநாயகனாக நடிக்கும் ‘கருடாவேகா’ என்ற படத்தில் ஆறு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே நயன்தாராவுக்கு அம்மாவாக நடிப்பதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆசைப்படும் தகவலும் வெளிவந்துள்ளது. பல படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ‘ஆரோகனம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களையும் இயக்கிய அவர், அண்மையில் நடைபெற்ற சைமா விருது விழாவுக்கு விருது வாங்க வந்திருந்த நயன்தாராவை சந்தித்துள்ளார். இருவருக்கும் அடுத்தடுத்து இருக்கை கிடைத்ததால் நயன்தாராவுடன் ஒரு ஃசெல்பி எடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதை தனது டுவிட்டரில் வெளியிட்டு, “நாங்கள் இருவரும் அம்மா-மகளாக நடித்தால் எப்படி இருக்கும்,” என்ற வாசகத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon