உதயநிதி ஸ்டாலினின் வெளியீடு காண்கிறது ‘பொதுவாக எம்மனசு தங்கம்’

புதுமுக இயக்குநர் தளபதி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்குச் சென்ற நிலையில், ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளதாம். இதையடுத்து படத்தை விரைவில் வெளியிட உள்ளனர். இப்படத்தில் உதயநிதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். பார்த்திபன், சூரி, மயில்சாமி ஆகியோரும் உள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.