சுடச் சுடச் செய்திகள்

போதை விவகாரம்: புலம்பும் சார்மி

போதைப் பொருள் விவகாரத்தில் பலர் சிக்கி இருப்பது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. போதைப் பொருள் கும்பலுடன் தெலுங்குப்பட முன்னணி நடிகர்கள் நவ்தீப், தருண் நடிகைகள் சார்மி, முமைத்கான் இயக்குநர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 12 பேருக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பூரி ஜெகன்னாத்திடம் போலிசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் மூலம் தன் திரையுலக வாழ்க்கையே சீரழிந்துள்ளதாக அவர் புலம்பி உள்ளார். இந்நிலையில் அடுத்தகட்டமாக நடிகை சார்மியிடம் விசாரணை நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் காரணமாக தனது மதிப்பும் புகழும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சார்மியும் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon