கவர்ச்சியை விரும்பாத இளம் நாயகி

குடும்பக் குத்துவிளக்காக தோற்றமளித்தால் திரையுலகில் சாதிக்க முடியாது என்று பலரும் இளம் நாயகி அனுபமாவுக்கு அறிவுரை கூறி வருகிறார்களாம். ஆனால் அவரோ கவர்ச்சி காட்டுவதில் அறவே விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டார். ‘கொடி’ படத்தில் தனு‌ஷுக்கு ஜோடியாக நடித்தவர் அனுபமா. ‘பிரேமம்’ படத்திலும் இவரைப் பார்க்க முடியும். இதுவரை குடும்பப் பெண்ணாக, கிராமத்துப் பெண்ணாக மட்டுமே நடித்து வருபவருக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் வருத்தத்தில் உள்ளார். இந்நிலையில் தோழிகளின் அறிவுரைப்படி அண்மையில் சில கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து, புகைப்படங்கள் எடுத்து, அவற்றை இணையத்தளங்களில் வெளியிட்டார். இதைக் கண்ட ரசிகர்களோ, “இந்தக் கவர்ச்சி எல்லாம் போதவே போதாது. இன்னும் தேவை,” என்கிற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் எரிச்சலாகிவிட்டாராம் அனுபமா. இதற்கும் மேல் கவர்ச்சி காட்டுவது தனக்கு ஒத்துவராது என்று அறிவுரை கூறுபவர்களிடம் பொரிந்து தள்ளுகிறாராம் அம்மணி.