தடையை மீறி வெளியாகும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அமலா பால், நடிகை மீனாவின் மகளான குழந்தை நட்சத்திரம் நைனிகா ஆகியோர் நடித்துள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை 'பரதன் பிலிம்ஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது. சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து அண்மையில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' 'கொடி வீரன்' ஆகிய படங்களை பரதன் பிலிம்ஸ் விநியோகம் செய்தது. அந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை வெளியிடுகிறது.

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பிறகு வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைத்தார்கள். தற்போது புதுப்படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப் பாளர்கள் சங்கம் அறிவித்து அதை செயல்படுத்தி வரும் நிலையில் இந்தப் படத்தை இம்மாதம் 29ஆம் தேதி வெளியிடப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் மறுபதிப்பே இந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!