‘சீமத்துரை’

கர்வத்துடன் செயல்படுவதால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய அனு பவங்களை விவரிக்கும் வகையில் உருவாகி வருகிறது 'சீமத்துரை'. அறிமுக இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் எழுதி உள்ளார். நாயகனாக கீதனும் நாயகியாக வர்ஷாவும் நடித்துள்ளனர். சுஜய் கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத் துக்கு ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார். "ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதேனும் திருப்பு முனை இருக்கவே செய்யும். சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள், சூழ் நிலைகள் காரணமாக அந்தத் திருப்புமுனை ஏற்படலாம். "இவ்வாறு ஏற்படும் திருப்பு முனை நல்லதோ கெட்டதோ... அதிலிருந்து எதிர்கால வாழ்க் கைக்கு ஒருவன் எப்படி தயார் படுத்திக் கொள்கிறான் என்பது முக்கியம். ஏனெனில் அதுதான் அவனது வாழ்வின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

"அப்படிப்பட்ட திருப்பு முனையை எதிர்கொள்ளும் ஒரு வன் தன் கர்வத்தால் ஏற்படக் கூடிய விளைவுகளை எப்படி எதிர்கொண்டான் என்பதே கதை. கிராமப் பின்னணியில் இந்தக் கதை பயணிக்கும்," என்கிறார் சந்தோஷ் தியாகராஜன்.

கீதன், வர்ஷா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!