சரண்யா: கடவுள் அருளால் எல்லாம் நன்றாக நடக்கிறது

'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்திலும் அம்மா வேடத்தில் நடித்து முடித்துள்ளார் சரண்யா. ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் துருவா, ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அஞ்சனா பிரேமும் மற்றொரு நாயகியாக நடித்துள்ளனர். இதில் துருவாவின் தாயாக வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

சில படங்களில் மட்டுமே மிகுந்த ஈடுபாட்டுடன் நடிக்கத் தோன்றும் என்று குறிப்பிடும் சரண்யா, 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படம் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்கிறார்.

"இப்படத்தில் நடிக்க அழைப்பு வரும்போது அதன் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் படக்குழுவில் உள்ள பெரும்பாலானோர் புதுமுகங் களாக இருந்தால் படத்தின் கதைக்குத் தான் முக்கியத்துவம் தருவேன். "மேலும் எனது கதாபாத்திரம் நன்றாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன். "சில கதைகளை, 'சரி... நடித்துத்தான் பார்ப்போமே' என்ற நினைப்புடன் ஏற்பேன். "ஆனால் இந்தப் படம் என்னை மட்டுமல்ல, படம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்திழுக்கும்," என்கிறார் சரண்யா.

இப்படத்தில் அன்றாடப் பிரச் சினைகளை எதிர்கொள்ளும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியாக நடித்துள்ளாராம். தனது கதாபாத்திரத்தை இயக்குநர் ராகேஷ் மிக அழகாக வடிவமைத் துள்ளதாகப் பாராட்டுகிறார். ஏன் அம்மா வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடிக்கிறீர்கள்? என்று பலரும் கேட்கிறார்களாம்.

"அம்மா வேடம் தான் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் எனது கதாபாத் திரத்தின் தன்மை வித்தியாசமாக அமைவதால் ரசிகர்களுக்கு போரடிக்க வில்லை. கடவுளின் அருளாலும் இயக் குநர்களின் கற்பனைகளாலும் எனக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது," என்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!