‘பாதுகாப்பாக உணர்கிறேன்’

அண்மைக்காலமாக ஷ்ருதிஹாசனைத் தமிழில் அதிகம் பார்க்க முடியவில்லை. எனினும் இந்திப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது மகேஷ் மஞ்ச்ரேக்கரின் இயக்கத்தில் உருவாகும் இந்திப் படத்தில் ஷ்ருதிதான் கதாநாயகி. அடுத்து தமிழில் சில படங்களை ஒப்புக்கொள்ளத் திட்ட மிட்டுள்ளாராம். நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் தந்தை கமல்ஹாசனுடன் சேர்ந்து இவரும் கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்வில் தேசபக்தி பாடல் ஒன்றைப் பாடியும் உள்ளார். இதை எண்ணிப் பெருமைப்படுவதாக அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஷ்ருதி. "திரையுலகில் அறிமுகமாகி பத்தாண்டு கள் ஆகின்றன. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் என்னைப் பொறுத்த வரை நல்ல கதையம்சம் கொண்டவை. அனைத்தையும் விருப்பப்பட்டு தேர்வு செய் தேன். அத்தகைய படங்களில் நடித்ததற்காக இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்கிறார் ஷ்ருதி.

கடந்த பத்து ஆண்டுகாலத் திரையுலகப் பயணம் என்பது தன்னைப் பொறுத்தவரை நன்றாகவே இருந்தது என்று குறிப்பிடும் அவர், இதேபோல தனது எதிர்காலப் பயணமும் சிறப்பாக அமையும் என நம்புவதாகச் சொல்கிறார். "எனக்குப் பிடித்த கதாபாத்திரத்திலும் கதைகளிலும் மட்டுமே நடிப்பேன். இதுதான் எனது திட்டவட்டமான முடிவு. "மத நம்பிக்கை குறித்து எனக்கும் என் தந்தைக்கும் இடையே வேறுபட்ட கருத்து உள்ளது. என்னைப் பொருத்தவரை ஆன் மீக சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன். ஆனால் அந்த சக்தி கோவில், தேவாலயம், மசூதியில் இருக்கிறதா என்று கேட்டீர்கள் எனில் அதற்கு என்னிடம் நேரடி யான பதில் இல்லை. ஆனால் அனைத்தையும் நான் நம்புகிறேன்," என்கிறார் ஷ்ருதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!