நாயகியுடன் நடிக்க கட்டுப்பாடு விதிக்கும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘அடங்க மறு’ படம் 21ஆம் தேதி வெளியாகிறது. அதுபற்றி கூறுகையில், “பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு இப்போது கொடுக்கும் தண்டனை போதாது. அதைவிட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் வக்கிர ஆசாமிகளுக்குப் பயம் இருக்கும். அது என்ன தண்டனை, எப்படி வழங்குவது என்பதைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘அடங்க மறு’. நாயகியுடன் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். எப்போதும் அதை மீற மாட்டேன்,” என்றார் ரவி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்