விரைவில் வெளியாகப் போகிறது 'தேவ்'

கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘தேவ்’. படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றனவாம். ரஜத் ரவிசங்கர் இப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். “கார்த்தியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவம். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நாயகன் கதாபாத்திரத்துக்கு அவர் மட்டுமே பொருத்தமானவர். அவரது அற்புத நடிப்பாற்றலை வேறொருவரால் நிச்சயம் வழங்கமுடியாது என்பது என் கருத்து. “படத்தை முடித்து படத் தொகுப்பில் ஈடுபட்டபோது எனது இந்தக் கருத்து எவ்வளவு நியாயமானது, சரியானது என்பதை நன்கு உணரமுடிந்தது,” என்கிறார் ரஜத் ரவி சங்கர். ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு இந்தப் படத்துக்கான முதற் கட்ட பணிகளைத் தொடங்கிய நிலையில், அனைத்துப் பணிகளும் மளமளவென நடந்தேறி மிக விரைவில் படம் வெளியாகப் போவதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது என்கிறார் ரஜத்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“’வடசென்னை’ இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும். ஒருவேளை இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நானே எனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். ரசிகர்களுக்கு எனது அன்பு,” என்று தெரிவித்துள்ளார் தனுஷ். 

17 Jul 2019

‘வடசென்னை 2’: தெளிவுபடுத்திய தனுஷ்