ஜீவா: ‘ஜிப்ஸி’ என்னை அதிர்ஷ்ட நடிகராக்கும்

‘ஜிப்ஸி’ படம் வெளியீடாகும்போது மற்ற நடிகர்கள் என் நடிப்பைப் பார்த்தும் என்னைப் பார்த்தும் பொறாமைப்படுவார்கள். அந்தளவுக்கு படத்தைப் பார்க்கும் மக்களை நான் மிரள வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார் நடிகர் ஜீவா.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி யுள்ள ‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வேயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத் துள்ளார். தமிழகத்தின் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமார் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ஜீவா பேசியபோது, “ஜிப்ஸி’ படம் நம் எல்லோருக்குமே  ஒரு உண்மை வாழ்க்கையை எடுத்துரைக்கும் படமாக இருக்கும். மனிதநேயம், அரசியல், சமூகச் சிக்கல்கள் என எதை எடுத் துக்கொண்டாலும் அதனுடன் நம்மை நாமே தொடர்புப்படுத்திக் கொள்ளும் வகையில் இப்படம் இருக்கும். 
“அத்துடன் இதுவரை நான் சிரமப்பட்டு நடித்த படங்களான ‘கற்றது தமிழ்’, ‘ராம்’, ‘ஈ’, ‘டிஷ்யூம்’ படத்தைவிட இந்தப் படத்துக்காக அதிகம் உழைத்திருக்கிறேன். 
“இந்தியாவில் நீங்கள் எந்த ஒரு இடத்தின் பெயரைச் சொன்னாலும் அது இந்தப்படத்தில் ஒரு காட்சியிலாவது இடம்பெற்றிருக்கும். 
“காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நிலவும் பருவ நிலையிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.