ராம்பாலா: மூன்றாம் பாகம் உருவாகிறது

‘தில்லுக்குத் துட்டு-2’ படம் வசூல்  ரீதியில் வெற்றி பெற்றுள் ளது மகிழ்ச்சி தருவதாகச் சொல் கிறார் இயக்குநர் ராம்பாலா. இதையடுத்து இதன் மூன்றாம் பாகத்தை உருவாக்குவது என முடிவு செய்துள்ளனராம்.
“இந்தப் படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பேய் என்பது எல்லோரையும் பயமுறுத்தக்கூடியது. ஆனால், இந்தப் பேயை யாரேனும் கலாட்டா செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தபோது உருவான கதை இது. 
“ஒருவகையில் முட்டாள் தனமான நகைச்சுவை என்று கூட இதைக் குறிப்பிடலாம். இதில் அடிதடி, குடும்ப உணர்வு கள் உள்ளிட்ட அம்சங்களையும் கலந்து ‘தில்லுக்குத் துட்டு’ உருவானது. அதற்குக் கிடைத்த வரவேற்புதான் இந்த இரண்டாம் பாகத்தை உருவாக்கும் ஆர் வத்தை ஏற்படுத்தியது. நாங்கள் எதிர்பார்த்தபடியே இதற்கும் வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. 
“கொடுத்த பணத்துக்கு நல்ல படத்தைப் பார்க்க முடிந்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி எனில், நல்ல வசூல் காரணமாக விநி யோகிப்பாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர்,” என்று பூரிப்புடன் பேசுகிறார் இயக்குநர் ராம்பாலா. 
இரண்டாம் பாகத்தின் படப் பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அப்போதே இதுவும் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னாராம்.
“அவரது வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது,” என்று மலர்ச்சி யுடன் சொல்கிறார் ராம்பாலா.