அழகை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் ஏமி ஜாக்சன்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகும் ஏமி ஜாக்சனின் கவர்ச்சி ஊர்வலம் நின்றபாடில்லை. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சிப்  படங்களை வெளியிட்டு வருபவர், திருமணம் நடைபெற உள்ள நிலை யிலும் அதைத் தொடர்வது விமர் சனத்துக்கு ஆளாகியுள்ளது.
ஆனால் ஏமி ஜாக்சனோ இதில் தவறேதும் இல்லை என்கிறார்.
“அழகிப் போட்டி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அழகை வெளிப்படுத்த வேண்டும். கவர்ச்சிக்கும் திருமணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,” என்கிறார் ஏமி ஜாக்சன்.