ஓவியா: காதலில் உள்ள நம்பிக்கை துளியும் கல்யாணத்தில் இல்லை

கோடி ரூபாய் கொடுத்தாலும் அரசியலில் ஒருபோதும் குதிக்கமாட் டேன் என்று கூறியுள்ள ஓவியா, காதலில் உள்ள நம்பிக்கை கல் யாணத்தில் இல்லை என்றும் கூறி யுள்ளார். 
ஓவியா நடித்துத் திரைக்கு வரவிருக்கும் ‘90 எம்எல்’ படத்தை ‘அழகிய அசுரா’ என்ற பெண் இயக்குநர் இயக்கியிருக் கிறார். இவரது உண்மைப் பெயர் அனிதா உதீப். இப்படத்துக்குச் சிம்பு இசையமைத்துள்ளதுடன் ஒரு காட்சியில் நடித்தும் உள்ளார். 
படத்தில் ஓவியா இரட்டை அர்த்த வசனம் பேசி, அரைகுறை உடையுடன் ஆபாசக்காட்சியில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வர வுள்ள நிலையில், ஓவியா சென் னையில் நேற்று செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். 
‘90 எம்எல்’ படத்தில் அரை குறை உடை அணிந்து, இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாசக் காட்சியில் நடித்திருப்பது ஏன் என்று கேட்டதற்கு, “ஆபாசம் என்று எதைக் கூறுகிறீர்கள்? பெண்கள் என்றாலே அழுது கொண்டு சோக வசனம் பேசி நடிக்கவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. பாலியல் காட்சி யிலும் நடிக்கவில்லை. 
“ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை மட்டுமே கொடுத்துள்ளேன்.  உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை உள்ளது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

“இது ஆணாதிக்கத்துக்கு எதி ரான படம். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்ப நடிப்பதில் தவறில்லை. படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைத்தான் செய் திருக்கிறேன். படத்தில் நான் கவர்ச்சியாக நடித்துள்ளேனே தவிர, ஆபாசமாக நடிக்கவில்லை. 
“எனக்குப் புகைபிடிக்கும் பழக் கம் இருந்தது. சினிமா திரை யரங்குகளில் போடப்படும் விளம் பரங்கள் மூலம் புகைபிடிப்பதால் வரும் கேடுகள் குறித்து அறிந்த தில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். 
“நிஜவாழ்க்கையில் எனக்குக் காதல் அனுபவம் இருக்கிறதா இல்லையா என்பது  எல்லோருக்கும் தெரிந்ததுதான். காதலில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கல்யாணத்தில் ‘அது’ இல்லை.
“சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி அரசியலுக்கு வந்துவிடுகின்றனர். என்னையும் அதுபோல் பிரபல கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் நேரில் சந்தித்துத் தங்கள் கட்சி யில் சேர அழைப்பு விடுத்தார்கள். அதற்கு நான் மறுத்துவிட்டேன். 
“என்னை கட்சியில் சேர அழைத்தது யார் என்பதை சொல்ல விரும்பவில்லை. கோடி ரூபாய் கொடுத்தால் பிரசாரத்துக்கு வரு வீர்களா என்று கேட்டால் நிச்சயம் மாட்டேன். கோலிவுட்டில் நடிகை யாக நல்லதொரு இடத்தைப் பிடிக்கவே ஆசைப்படுகிறேன்,” என்று கூறியுள்ளார் ஓவியா.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்