‘காஞ்சனா’ மூன்றாம் பாகம் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு விஷயங் களைப் பகிர்ந்து வருகிறார் நடிகை ராய் லட்சுமி. இதன் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து இடை வெளியின்றி தொடர்பில் இருக்க முடிக்கிறது என்றும், இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறுகிறார்.
“ரசிகர்களிடம் சமூக வலைத் தளங்கள் மூலம் நேரடியாகப் பேச முடிகிறது. அதனால்தான் இத் தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கு கிறேன். 
“என்ன.... அவ்வப்போது எதிர் மறையான கருத்துகள், விமர் சனங்கள் வந்து சேரும். அவற்றை எல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை. 
“இணைய வெளியில் கோடிக் கணக்கான நல்ல விஷங்கள் இருக்கும்போது அதிலிருக்கும் சில எதிர்மறை அம்சங்களை நினைத்து ஏன் நம்மைக் குழப்பிக் கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார் ராய்லட்சுமி.
தற்போது தாம் நடித்து வரும் படங்கள், அன்றாட நடவடிக்கைகள் குறித்த சில தகவல்கள், தாம் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் என இவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் பல சுவையான விஷயங்கள் இடம் பெறுகின்றன. அவற்றில் தமது படங்கள் தொடர்பாக விளம்பரப் படுத்துவதில்லை என்கிறார் ராய் லட்சுமி. 
ராய் லட்சுமி திரைத்துறையில் கால்பதித்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். 15 வயதில் சினிமாவில் நுழைந்த தமக்கு இன்று வரை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.