‘கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்’

கோடிகள் கொடுத்தாலும் அழகுச் சாதனப் பொருள் விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று சாய் பல்லவி மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான சாய் பல்லவி, தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா வுடன் இவர் நடித்துள்ள என்.ஜி.கே படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் சாய் பல்லவிக்கு அழகுச் சாதனப் பொருள் விளம்பர படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதற்குச் சம்பளமாக 2 கோடி ரூபாய் தரவும் அந்நிறுவனம் முன்வந்துள்ளது.
ஆனால் ‘மேக்கப்’ போடுவதை விரும்பாது இயற்கையான அழகையே நம்பும் சாய் பல்லவி அதில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தன் முதல் படத்தில்கூட முகத்தில் இருக்கும் பருக்களைக்கூட அவர் மறைக்க முயலவில்லை.
‘பிரேமம்’ படத்தில் அவர் முகத் துக்குப் பருக்கள் மேலும் அழகுச் சேர்த்ததாக ரசிகர்கள் பாராட்டினர். எனவே செயற்கை அழகுப் பொருட் களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிப்பதில்லை என்பதைக் கொள் கையாக வைத்து இருப்பதாகவும் அதனால் விளம்பரபட வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகி றது.
இதற்கிடையே, என்ஜிகே படம் தொடர்பாக பேட்டியளித்த சாய் பல்லவி, “சினிமாவுக்கு நான் திட்டம் போட்டு வரவில்லை. சினி மாவில் எனக்கு வாய்ப்புகள் இருக் கும் வரை நடிப்பேன். வாய்ப்புகள் குறைந்தால் என்னுடைய மருத்து வர் தொழிலைப் பார்க்க போய்விடு வேன்.
“சினிமா தொழில் வித்தியாச மானது. எல்லாவித கதாபாத்திரங் களையும் செய்ய ஆசை இருக்கி றது.
“நான் நடித்த ஒவ்வொரு படமும் வெவ்வேறு விஷயங்களை எனக்குக் கற்றுக்கொடுத்து இருக்கிறது. எந்தக் கதாபாத்திரத் திலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது.
“எல்லோருக்கும் ஒரு கருத்துச் சொல்கிற கதையில் நடிக்க ஆசை இருக்கிறது,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்