ஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களும் கைவசம்; மகிழ்ச்சியில் மிதக்கும் இனியா

மலையாளம், கன்னடம், தமிழ் என ஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களிலும் நடித்து வரும் இனியா மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறார்.
தமிழில் ‘வாகை சூடவா’ படம் மூலம் அறிமுகமான இனியா, சில காலம் காணாமல் போயி ருந்தார்.
மலையாளம், கன்னடம் என இரு மொழிகளி லும் பல படங்களில் நடித்து வந்த இனியாவிற்குத் தமிழ்ப்பட வாய்ப்புகள் தாமதமாகவே வரத் தொடங்கின.
அண்மையில் அவர் நடித்த ‘பொட்டு’ படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது தமிழ் பட வாய்ப்பு களும் அவருக்கும் கைகொடுக்க ஆரம்பித்துள்ளன.
தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் ‘காபி’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. 
இதுபற்றி பேசிய அவர், “அதிரடியான சத்யபாமா என்ற காவல்துறை அதிகாரி வேடம் ஏற்கிறேன். என் திறமையை நிரூபிக்கும் ஒரு படமாக இது இருக்கும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்தப் படம் காரணமாக இருக்கும்.
“மலையாளத்தில் பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குநர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திர ஜித் நடிக்கும் ‘தாக்கோல்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பக் கதையாக உருவாகி வரும் இப்படமும் என் திரை வாழ் வில் மைல்கல்லாக இருக்கும்.
“கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரோட ‘துரோணா’ படத்துல அவருக்கு ஜோடியா நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கல்வியை மையப்படுத்திய கதை இது. எனக்கு ரொம்ப நல்ல பேரைக் கொடுக்கும்.
“தமிழில்தான் ஒரு சின்ன இடைவெளி விழுந்து விட்டது. அது ‘காபி’ படத்தின் மூலம் சரியாகி விடும்,” என்றார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியோடு இனியா நடித்த ‘பரோல்’ படத்திற்குச் சிறந்த இரண்டாம் கதாநாயகி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“’வடசென்னை’ இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும். ஒருவேளை இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நானே எனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். ரசிகர்களுக்கு எனது அன்பு,” என்று தெரிவித்துள்ளார் தனுஷ். 

17 Jul 2019

‘வடசென்னை 2’: தெளிவுபடுத்திய தனுஷ்