‘பெண்கள் அஞ்சக் கூடாது’

திரைத்துறை மட்டுமல்லாமல் அனைத் துத் துறைகளிலும் பெண் களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என நடிகை தனுஸ்ரீ தத்தா வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதற் காகவே தனக்கு நேர்ந்த பாலி யல் தொல்லை குறித்து புகார் அளித் ததாகக் குறிப்பிட் டுள்ள அவர், விசாரணையின் முடிவில் உண் மைகள் வெளி வரும் என நம் பிக்கை தெரிவித் துள்ளார்.

போலிவுட்டில் பல நடிகைகள் பாலியல் தொல் லைகளை எதிர் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்துப் புகார் அளித்தால் வாய்ப் புகள் கிடைக்கா மல் போய் விடுமோ? என்று அஞ்சி யாரும் புகார் கொடுப்ப தில்லை," என்று தனுஸ்ரீ குறிப்பிட் டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதியாக இருக்காமல், தங்கள் மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்பது தமது கோரிக்கை என்கிறார் தனுஸ்ரீ தத்தா.

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் ('காலா' படத்தின் வில்லன்) தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுப்பி உள்ளார் தனுஸ்ரீ தத்தா. அவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் நானா படேகர் உள்ளிட்ட சிலர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நானா படேகர் குற்றமற்றவர் எனப் போலிசார் அறிவித்துள்ளதாக அண்மையில் ஒரு தகவல் பரவியது. ஆனால் தனுஸ்ரீ தத்தா இதை மறுத் துள்ளார். இச்செய்தி வெறும் வதந்தி என குறிப் பிட்டுள்ள அவர், நானா படேகர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதை தமது வழக் கறிஞர் உறுதி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

"காவல்துறையின் விசாரணை சற்று மெதுவாக நடப்பது உண்மைதான். சாட்சிகளைத் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளிக்க வைப்பது சிரமமாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை இரண்டு சாட்சிகள் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளனர்.

"நான் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகள் பலர் உள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இன்னும் வாக்குமூலம் அளிக்கவில்லை," என்று கூறியுள்ளார் தனுஸ்ரீ தத்தா.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்க வர்கள் என்பதால் சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க அஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்ட சாட்சிக ளும் கூட தற்போது மனம் மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

"நான் குறிப்பிட்ட சம்பவம் நடந்து 10 ஆண்டு களாகி விட்டன. நானா படேகர் அத்துமீறி நடந்து கொண்டார். இதை நான் தட்டிக்கேட்டபோது நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டோர் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள் என்கிறார் தனுஸ்ரீ.

"கோலிவுட் மட்டுமல்லாமல் பல்வேறு துறைக ளிலும் பெண்கள் பாலியல் தொல்லைகளை எதிர் கொள்கின்றனர். இதிலிருந்து தங்களைத் தற் காத்துக் கொள்ள வேண்டுமெனில் பெண்கள் தைரியமாகச் செயல்பட வேண்டும். வாய்ப்புகள் பறிபோய்விடுமோ என அஞ்சக்கூடாது," என தனுஸ்ரீ தத்தா மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!