தம்பதிகளின் படப்பிடிப்பு துவங்கியது

திருமணத்திற்குப் பிறகு ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து நடிக்கும் படம் ‘டெடி’. இதனை ‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்குகிறார். ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக் கிறார். இமான் இசை யமைத்து யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கின்றன. 

ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் இருவரும் இணைந்து நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இவர்கள் தவிர சதிஷ், கருணாகரன் முக்கிய கதாபாத்திரங் களில் நடிக்கிறார்கள்.

பூஜையின்போது சாயிஷா சில காரணங்களால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்