சுடச் சுடச் செய்திகள்

‘கோமாளி’யில் ஆதாம் ஏவாள்

‘அடங்க மறு’ படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்க நாதன் இயக்குகிறார். ‘வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்’ இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்திற்குக் ‘கோமாளி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒவ் வொரு வேடத்தின் படத் தையும் ஒவ்வொரு வாரமும் படக்குழு வெளியிட்டு வரு கின்றது.

இதில் அண்மையில் வெளியான வேடத்தில் ஜெயம் ரவியும் காஜல் அகர்வாலும் ஆதாம் ஏவாளாக நடித்திருப்பதாக படங்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் அதிகமாக பரவி வருகிறது. 

மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon