முதன்முதலாக தென்கொரியாவில் வெளியாகும் தமிழ் படம்

நடிகர் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படம் முதன் முதலாக தென் கொரியாவில் வெளியாக இருப்பது தமிழ்த் திரைக்கும் நடிகர் சூர்யாவுக்கும் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பாக பேசப்படுகிறது.

தமிழ்ப்படங்களின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப் படங்கள் உலக அளவில் வெளியீடாகி படங்களின் வருமானம்  பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்து வருகிறது.  

அதிலும் அமெரிக்கா, கனடா, வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகிக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலைக் குவித்து வருகின் றன.

இந்த நிலையில் முதல் முறையாக தமிழ்ப்படம் ஒன்று தென்கொரியாவில் மே 31ஆம் தேதி வெளியீட்டு தினத்தன்றே வெளியாக இருப்பதால் தென்கொரியத் தமிழர்கள் பலரும் மகிழ்ச்சி யில் இருப்பதாகக் கூறப் படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய் பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தை அமெரிக்காவில் 150க்கும் அதிகமான திரையரங்கு களில் வெளியிட உள்ளார்கள். சூர்யா நடித்த படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். 

அது மட்டுமல்லாமல் வெளியீட் டிற்கு ஒரு நாள் முன்னதாக மே 30ஆம் தேதியே படத்தின் பிரிமீயர் காட்சியும் அங்கு நடைபெற உள்ளது. தெலுங்கிலும் இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

செல்வராகவன் இயக்கிய சில தெலுங்குப் படங்கள் மூலம் அவர் தெலுங்கில் நன்கு அறிமுகமானவர். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர்கள். சூர்யாவுக்கும் அங்கு தனி வரவேற்பு உள்ளதால் மேலே சொன்ன விஷயங்களும் படத் திற்குக் கூடுதல் பலமாக உள்ளன.

‘என்ஜிகே’ ஓர் அரசியல் படம் என்பதால் தேர்தல் முடிவுகள் வந்த ஒரு வாரத்தில் சூட்டோடு சூடாக வெளியாவதும் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு ஆகும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon