கதாநாயகிகளின் கோடை சுற்றுலா

கோடை காலத்து தகிப்பைச் சமாளிக்க முடியாமல் கோடம்பாக்கத்து கிளிகள் வெவ்வேறு திசைகளில் பறந்துவிட்டன. 

ராய் லட்சுமியைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் வெளிநாட்டுக்குச் சென்று திரும்புகிறார். 

இம்முறை தாய்லாந்தில் உள்ள இரண்டு தீவுகளைச் சுற்றிப்  பார்த்தாராம். அங்கே நாளொரு நீச்சல் உடையும் பொழுதொரு கடற்கரையுமாக சுற்றித் திரிந்து புகைப்படம் எடுத்துள்ளார். ஊர் திரும்பிய பிறகு ஒவ்வொரு படமாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களைச் சூடேற்றி வருகிறார் ராய் லட்சுமி. 

நடிகை திரிஷா குறுகிய கால பயணமாக பாரிஸ் நகருக்குச் சென்று திரும்பினாராம். ‘காஞ்சனா-3’க்குப் பிறகு சற்றே ஓய்வு கிடைத்ததைப் பயன்படுத்தி மும்பையில் கோடைக் காலத்தைக் கழித்திருக்கிறார் வேதிகா. 

அவரது வீடும் அங்குதான் உள்ளது. எனினும் நடிகையான பிறகு பல இடங்களுக்குச் செல்ல முடியவில்லையாம். இந்நிலையில் மும்பையின் பிரபல ஏரிப்பகுதிக்குச் சென்று ஆசை தீர படகு சவாரி  மேற்கொண்ட வகையில் இந்தக் கோடைக்காலம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது என்கிறார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon