‘தமிழ்த் திரையை மறக்கமாட்டேன்’

டாப்சி நடித்திருக்கும் ‘கேம் ஓவர்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் 14ஆம் தேதி வெளிவருகிறது. 

இதையொட்டி சென்னை வந்த டாப்சி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “கேம் ஓவர் என் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாகும். இதில் நான் ஒரு கணினி விளையாட்டை உருவாக்குபவராக நடித்திருக் கிறேன். ஒரு விபத்தில் காலை இழந்துவிடும் நான் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு கணினியில் விளையாட்டை உருவாக்கு வேன். அப்போது அந்த வீட்டில் எனக்கு ஓர் ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை எனது கணினி அறிவை வைத்து எப்படிச் சமாளிக்கிறேன் என்பதுதான் கதை.

“தமிழில் நடித்து நீண்ட நாட்கள் ஆகின்றன. இந்தியில்தான் பல படங்களில் நடிக்கிறேன். தமிழில் ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள். யாரும் அழைப்பதில்லை. அதனால் நடிக்க வில்லை என்பதுதான் எனது பதில். 

‘பிங்க்’ படத்தின் மறுபதிப்பில் கூட நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அணுகியிருந் தால் நிச்சயம் நடித்திருப்பேன். அடுத்து ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுபற்றி தயாரிப்புத் தரப்பில் இருந்து முறைப்படி அறிவிப் பார்கள். 

“என்னை வளர்த் தது தமிழ்ப் படங்கள் தான். அதை ஒரு போதும் மறக்கமாட்டேன்,” என்றார்.

‘கேம் ஓவர்’ படம் மூன்று மொழிகளிலும் சேர்த்து 1,200 திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon