‘ஓய்வுதான் சோகம் தரும்’

திரையுலகில் தமக்கு நெருக்கமான தோழி என்றால் அது ஷ்ருதிஹாசன் தான் என்கிறார் தமன்னா.

இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டால் சினிமா, திரைப்படங்கள், தொழில்நுட்ப விஷயங்கள் என்றெல்லாம் பேச மாட்டார்களாம். மனித வாழ்க்கையில் பரவிக் கிடக்கும் யதார்த்தம், மனிதம் குறித்துதான் அலசுவதாகச் சொல்கிறார்.

இவர்களது நட்பு வட்டத்தில் காஜல் அகர்வாலும் உள்ளார். நடிகர்களில் தனுஷ், ராணாவும் தொடர்புகொண்டு பேசுவார்களாம்.

நடிகர் ராணாவைப் பொறுத்தவரை அனை வருக்குமே உதவி செய்யும் நல்ல நடிகர் என்று மெச்சிக் கொள்கிறார் தமன்னா. தனக்கு மட்டுமில்லாமல் திரை உலகைச் சேர்ந்த பலருக்கும் ராணா பல்வேறு வகையில் உதவி செய்ததாகக் கூறுகிறார்.

தமன்னாவைப் பொறுத்த வரை எந்த மொழியில் நடிக்கிறோம் என்பது முக்கியம் இல்லையாம். சரியான, நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்பதே முக்கியம் என்கிறார்.

“சரியான கதையைத் தேர்ந்தெடுத்தாலே போதும். அது தன்னால் வெற்றியடையும். அதன்பிறகு அந்த வெற்றிக்கான நமது பங்களிப் பும் ரசிகர்களால் பேசப்படும்,” என்கிறார். இவர் அவ்வப்போது இந்தியிலும் தலைகாட்ட தவறு வதில்லை.

பிரபுதேவா இயக்கத்தில் ‘காமோ‌ஷி’ இந்திப் படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். கதைப்படி காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளாராம்.

“மிகவும் கஷ்டமான கதாபாத்திரம். மற்ற படங்களில் நடிப்பதுபோல் இதில் அவ்வளவு சுலபமாக நடித்துவிட முடியாது. முற்றிலும் மாறு பட்ட நடிப்பை எதிர்பார்த்தார் பிரபுதேவா. அந்த நடிப்பை என்னால் வழங்க முடிந்தது என்பதில் திருப்தியாக உணர்கிறேன்.

“ஊனமுற்ற பெண்ணாக நடிப்பதால் எனது நடிப்பு யதார்த்தமாகவும் நம்பக்கூடிய வகையிலும் இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கென்றே ஒருவர் நியமிக்கப்பட்டார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எந்நேரமும் என்னைக் கவனித்துக் கொண் டிருப்பார். சிறு தவறு செய்தாலும் அது உடனடியாக சுட்டிக்காட்டப்படும்,” என்கிறார் தமன்னா.

சவாலான கதாபாத்திரம் என்பதால், போதுமான பயிற்சிக்குப் பிறகே படப்பிடிப்பில் பங்கேற்றாராம். தனது உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கு மென நம்புவதாகச் சொல்கிறார்.

இடைவிடாத படப்பிடிப்பு, பயணங்கள் காரண மாக குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவழிக்க முடியவில்லை எனும் வருத்தம் தமன்னாவுக்கு உள்ளது. அதே சமயம் வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்.

“நண்பர்களையும் குடும்பத்தாரையும் பார்க்கும்போது எனது கைபேசியை அறவே பயன்படுத்த மாட்டேன். ஏனெனில் அந்த நேரம் அவர்களுக்கானது. சில நடிகைகள் ஒரு படம் முடிந்தவுடன் சுற்றுலா செல்வார்கள். ஆனால் நான் அப்படி அல்ல.

“குறைந்தபட்சம் ஒரு வாரம் வேலையில்லை என்றாலும் சோகமாகி விடுவேன். கேமரா முன்பு நிற்பது என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஓய்வுதான் வருத்தமளிக்கும்,” என்று சொல்லும் தமன்னாவுக்கு, அவரது நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறி உள்ளது.

வேறொன்றுமில்லை, சுந்தர் சி. இயக்கத்தில் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படத்தில் நாயகி யாக ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் கதையைக் கூறிய சுந்தர்.சி. இரு கதாபாத்திரங்களை குறிப் பிட்டு அதில் எது வேண்டும் என்று கேட்டாராம். அவற்றுள் சவாலான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தாராம் தமன்னா. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!