சாய் தன்ஷிகா கூறிய அறிவுரை

இந்தியர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான் காரணம் என்றும் இதை என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார். 

பல தியாங்களைச் செய்து பெற்றுள்ள சுதந்திரத்தை அனைவரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நமது அடுத்த தலைமுறைக்காக நாட்டை நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் இயன்றளவு செயலாற்றுங்கள். 

“சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தின் மாற்றத்திற்குப் பெரிதும் உதவும். இதுவே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமையும்,” என்றார் தன்ஷிகா.