உற்சாகத்தில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பது தெரிந்த விஷயம்.

அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் துவங்கி இருக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். 

படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் என்றும் படக் குழு தெரிவித்துள்ளது.

மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் கீர்த்தி.