கோபத்தை வெளிப்படுத்திய இலியானா

தமக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை என்கிறார் நடிகை இலியானா.

அது மட்டுமல்ல, தனக்காக சல்லிக்காசு கூட செலவழிக்க முன்வராதவர்கள் அறிவுரை மட்டும் கூறத் தேவையில்லை என்றும் அவர் காட்டத்துடன் கூறியுள்ளார்.

காதல் முறிவு, பட வாய்ப்பு கள் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் இலியானா கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் மீது தாங்கள் பரிதாபம் கொள்வதாகக் குறிப்பிட்டு பல அறிவுரைகளையும் கூறி உள்ளனர். அவர்களுக்கு இலியானா பதில் அளித்துள்ளார்.

“எனக்காக நீங்கள் பில் தொகையை செலுத்தாத வரையில், ஒரு கோழி வாங்கிதர முடியாத நிலையில், நான் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி யாருக்கும் கிடை யாது,” என கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் இலியானா.

Loading...
Load next