‘எனக்கு கதைதான் முக்கியம்’

கதை­யைப் பொறுத்தே ஒரு படத்­தில் நடிக்க ஒப்­புக்­கொள்­வது குறித்து முடி­வெ­டுப்­ப­தா­கச் சொல்­கி்­றார் பிர­சன்னா.

‘மாஃபியா’வில் ஸ்டைல் வில்­ல­னாக நடித்து அசத்­தி­ய­வ­ருக்கு விமர்­ச­கர்­க­ளி­டம் இருந்து பலத்த பாராட்டு கிடைத்­துள்­ளது. இதை­ய­டுத்து மீண்­டும் தனி நாய­க­னா­க­வும் நடிப்­ப­தற்கு தயா­ராகி வரு­கி­றார்.

தற்­போது கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பீதி­யால் திரை­யு­ல­கம் முடங்­கி­யுள்ள நிலை­யில், வீட்­டி­லி­ருந்­த­ப­டியே ரசி­கர்­க­ளு­டன் சமூக வலைத்­த­ளங்­களில் உரை­யாடி வரு­கி­றார் பிர­சன்னா.

அண்­மைய கலந்­து­ரை­யா­ட­லின்­போது தன்­னி­டம் கேட்­கப்­பட்ட பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு அவர் வெளிப்­ப­டை­யா­க­வும் கொஞ்­சம்­கூட தயக்­க­மின்­றி­யும் பதி­ல­ளித்­தார்.

“‘மாஃபியா’ மிக­வும் எளி­மை­யான கதை என்­பது எனக்­குத் தெரி­யும். இயக்­கு­நர் கார்த்­திக் நரே­னி­டம் ஒரு பார்வை இருந்­தது. எனது சின்ன அனு­ப­வத்­தைக் கொண்டு அதை ஒரு வழக்­க­மான வில்­லன் போல ஆக்­கா­மல் பார்த்­துக் கொண்­டேன்.

“மேலும்  என்­னைப் பொறுத்­த­வரை அந்த வில்­லன் கதா­பாத்­தி­ர­மும் ஒரு கதா­நா­யன்­தான். அந்­தப் பார்­வை­யு­டன்­தான் அந்­தப் பாத்­தி­ரத்தை அணு­கி­னேன். திரை­யில் நான்­தான் நாய­கன் என்­றும் நம்­பி­னேன். அதற்­குப் பலன் கிடைத்­தது,” என்­றார் பிர­சன்னா.

ஒரு படத்­தில் நடிக்க வேண்­டும் என்­பதை எதைக்­கொண்டு தீ்ர்மா­னிக்­கி­றீர்­கள்? என்ற கேள்­விக்கு விரி­வா­கப் பதி­ல­ளித்­தார்.

“என்­னைப் பொறுத்­த­வரை ஒரு கதை­தான் படத்­தின் வெற்­றிக்கு முக்­கி­ய­மான அம்­சம். கதை­யைப் பொறுத்­து­தான் எனது முடி­வும் இருக்­கும். இன்­னும் சில விஷ­யங்­க­ளை­யும் பரி­சீ­லிக்க வேண்­டி­ய­தும் அவ­சி­யம் தான்.

“யாரி­ட­மும் உதவி இயக்­கு­ந­ராக இல்­லாத ஓர் அறி­முக இயக்­கு­நர் கதை சொன்­னால் அவ­ரது படத்­தில் நடிப்­பீர்­களா? என்று கேட்­கி­றீர்­கள். நிச்­ச­யம் நடிப்­பேன்.

“நான் எதிர்­பார்க்­கும் அம்­சங்­கள் இருக்­கும் பட்­சத்­தில் எந்­த­வொரு படத்­தி­லும், யாரு­டைய இயக்­க­மாக இருந்­தா­லும் நடிப்­பேன்,” என்­றார் பிர­சன்னா.

அறி­முக இயக்­கு­நர்­கள் தமிழ் சினி­மா­வில் உரிய முக்­கி­யத்­து­வத்­து­ட­னும் மரி­யா­தை­யு­ட­னும் வர­வேற்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், திரைத்­து­றைக்கு அதி­க­மா­னோர் வரு­வது அதன் வளர்ச்­சிக்கு உத­வும் என்­றார்.

ஊர­டங்­கைப் பயன்­ப­டுத்தி தனது குழந்­தை­க­ளு­டன் மகிழ்ச்­சி­யா­கப் பொழு­தைக் கழித்து வரு­கி­றா­ராம் பிர­சன்னா. மேலும் ஓவி­யம் வரை­வ­தி­லும் கவ­னம் செலுத்­து­கி­றா­ராம்.

“குழந்தை விஹா­னு­டன் ஏபி­சிடி, 123 எழு­து­கி­றேன். பொம்­மை­கள் வைத்து விளை­யா­டு­கி­றேன். எனது மகள் ஆத்­யந்­தா­வோடு சேர்த்து எனது செல்ல நாய்­கள் பாப்­லோ­வும் மார்­லோ­வும் என்னை எப்­போ­தும் ஓய்­வெ­டுக்க விடு­வ­தில்லை.”

விஜய்­யு­டன் நடிக்­கும் வாய்ப்பு வந்­தால் எப்­படி இருக்­கும்? என்ற கேள்­விக்கு, “அப்­ப­டி­யொரு வாய்ப்பு கிடைத்­தால் அந்­தத் திகைப்பு வான­ளவு இருக்­கும்,” எனப் பதி­ல­ளித்­துள்­ளார் பிர­சன்னா.

உங்­கள் வாழ்க்­கை­யில் மிகச்­சி­றந்த தரு­ணம்?

“இரண்டு தரு­ணங்­கள் உள்­ளன. விஹான் பிறக்­கும்­போது, ஆத்­யந்தா பிறக்­கும்­போது என் கைகளில் அவர்­க­ளைக் கொடுத்த தரு­ணங்­கள்­தான் அவை,” என்­கி­றார் பிர­சன்னா.

‘துப்­ப­றி­வா­ளன்-2’ படத்­தில் பிர­சன்னா மீண்­டும் விஷா­லு­டன் கூட்­டணி அமைக்க வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­தப் படத்­தின் மூலம் விஷால் இயக்­கு­நர் அவ­தா­ரம் எடுக்­கப் போகி­றார்.

விஷா­லும் தானும் நீண்­ட­நாள் நண்­பர்­கள் என்று குறிப்­பி­டும் பிர­சன்னா, இயக்­கு­ந­ரா­கும் தனது நண்­ப­ருக்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

“பல வரு­டங்­க­ளாக ஒரு நல்ல நண்­ப­ராக விஷாலை எனக்­குத் தெரி­யும். இன்­னும் அவரை இயக்­கு­ந­ரா­கப் பார்க்­க­வில்லை. அவ­ருக்கு என் வாழ்த்­து­கள். “அவர் கடின உழைப்­பாளி. எனவே இயக்­கு­ந­ரா­க­வும் அவர் வெற்றி பெறு­வார் என நம்­பு­கி­றேன்.”

சினே­கா­வும் பல படங்­களில் நடிக்க இருப்­ப­தா­கத் தெரி­கி­றதே?

“அவர் எனக்கு அனைத்து வகை­யி­லும் பக்­க­ப­ல­மாக உள்­ளார். அவ­ரது திற­மைக்­கேற்ற வாய்ப்­பு­கள் அமை­யும்­போது நடிக்க முன்­வ­ரு­கி­றார். இரு­வ­ரும் நன்கு திட்­ட­மிட்டு எந்­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­டாத வகை­யில் திரை­யு­ல­கப் பணி­களை மேற்­கொள்­கி­றோம்.

“அந்த வகை­யில் மன­நி­றை­வு­டன் செயல்­பட முடி­கிறது. 

“அஜீத், விஜய் ஆகி­யோ­ரு­டன் திரை­யில் மோதத் தயார்,” என்­கி­றார் 

பிர­சன்னா.