பிக்­பாஸ் வீட்­டில் 70 நாட்களும் சிறைவாசம் போல் உணர்ந்தேன்

நாய­கி­யாக சில படங்­களில் நடித்­துள்ள போதி­லும், ‘காலா’வில் ரஜி­னி­யின் மரு­ம­க­ளாக நடித்­தது கூடு­தல் மகிழ்ச்­சியை அளித்­த­தா­கச் சொல்­கி­றார் ‘பிக்­பாஸ்’ புகழ் சாக்‌ஷி அகர்­வால்.

‘பிக்­பாஸ்’ நிகழ்ச்சி கூடு­தல் வெளிச்­சம் தந்­துள்­ளது என்­றா­லும், பிக்­பாஸ் வீட்­டில் இருந்த­போது சிறை­யில் பொழு­தைக் கழித்­தது போன்ற உணர்­வு­தான் ஏற்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

தற்­போது ஜி.வி.பிரகாஷு­டன் ‘ஆயி­ரம் ஜென்­மங்­கள்’, ஆர்­யா­வு­டன் ‘டெடி’ என சில படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருக்கி றாராம்.

பல சிறு முத­லீட்­டுப் படங்­களில் கதா­நா­ய­கி­யாக நடித்­தி­ருந்­தா­லும் ரசி­கர்­கள் இப்­போ­து­தான் தம்மை நன்கு அடை­யா­ளம் கண்டு கொள்­வ­தா­கச் சொல்­லும் சாக்‌ஷி, தற்­போது தீவிர உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார். 

புதுப்­ப­டம் ஒன்­றில் ஏற்­றுள்ள முக்­கிய கதா­பாத்­தி­ரத்­துக்­கா­கவே இந்த மெனக்­கெ­டல் எனத் தக­வல். அந்­தப் படம் குறித்த அறிவிப்பு விரை­வில் வெளி­யாக உள்­ளது.

“உண்­மை­யில் ‘காலா’தான் எனக்கு பளிச்­சென்று அடை­யா­ளத்­தைக் கொடுத்­தது. ரஜினி சாரின் மரு­ம­க­ளா­கச் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்­தா­லும் அது தந்­தி­ருக்­கும் புக­ழுக்கு எது­வும் இணை­யில்லை,” என்­கி­றார் சாக்‌ஷி.

‘பிக்­பாஸ்’ நிகழ்ச்சி தமக்கு மிகச் சிறந்த பாடங்­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்­த­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், பிக்­பாஸ் வீட்­டில் தாம் நிறைய விட்­டுக்­கொ­டுக்க வேண்டி­யி­ருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

“நானும் என் தங்­கை­களும் வீட்­டில் செல்­லப்­பெண்­க­ளா­கச் செல்­வாக்­கு­டன் வளை­ய­வ­ரு­ப­வர்­கள். வீட்­டில் நமக்­கு கேட்­டது கிடைக்­கும். அம்மா, அப்­பா­போல் பாது­காப்பு வளை­ய­மாக உல­கில் யாருமே இருக்க முடி­யாது.

“ஆனால், பிக்­பாஸ் வீட்­டுக்­குள் தொலை­பேசி கிடை­யாது. வெளி­யு­ல­கு­டன் தொடர்பு கிடை­யாது என்ற நிபந்­த­னைகளை ஒப்புக்­கொண்டு போய்­விட்­டா­லும் மூன்­றா­வது நாளி­ல் இருந்து மன அழுத்­தம் உரு­வா­கி­விட்­டது. நிறைய விட்­டுக்­கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது. நிறைய எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டி­யி­ருந்­தது,” என்­கி­றார் சாக்‌ஷி.

வித­வி­த­மான மனி­தர்­களை முதல்­மு­றை­யாக ஒரு பூட்­டிய வீட்­டுக்­குள் சந்­தித்­த­போது அவர்­கள் எப்­படி நடந்து­கொள்­வார்­கள் என்­பதை காண முடிந்­த­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், பிக்­பாஸ் வீட்­டில் தாம் அனு­ப­வித்த நெருக்­க­டி­கள் கொஞ்­ச­நஞ்­ச­மல்ல என அங்­க­லாய்க்கிறார். “அங்கே இருந்த 70 நாட்­களும் சிறை­யில் இருந்­த­து­போன்ற உணர்­வு­தான். மீண்­டும் பிக்­பாஸ் வீட்­டுக்­குள் செல்­வீர்­களா என்று கேட்­டால், நிச்­ச­ய­மா­கப் போக­மாட்­டேன் என்­ப­து­தான் எனது பதில்,” என்­கி­றார் சாக்‌ஷி.

‘காலா’ படப்­பி­டிப்­பின்­போது இவ­ருக்­குப் பிறந்­த­நாள் என்­பதை அறிந்து பெரிய கேக் வாங்கி வரச்­செய்து, வாழ்த்து தெரி­வித்­தா­ராம் ரஜினி.

அதேபோல் நடிகர் அஜீத் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பின் போது சாக்‌ஷிக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு ஒன்றை தாமே தயாரித்து பரிமாறினாராம்.