நான்கு வகையான காதலை அலசும் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’

மிகவும் ஜாலியான படமாக உருவாகி உள்ளது ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. ஜானகிராம் இயக்கியுள்ளார். இதில் கலையரசன், ஹரிகிருஷ்ணன், ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், வேலைக்குச் செல்லும்போது ஏற்படும் காதல், திருமணத்துக்குப் பிறகான காதல் என நான்கு வகை காதல்கள் குறித்து இப்படத்தில் அலசி உள்ளதாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் குமார். படத்தின் கதையைக் கேட்டபோது ‘ஆண் பாவம்’ படம்தான் இவரது நினைவுக்கு வந்ததாம். அந்தத் தலைப்பை பெற முயன்றபோது அதன் தயாரிப்புத் தரப்பு, தரமுடியாது எனக் கூறிவிட்டதாம்.