மனக்கவலையை வெளிப்படுத்திய சேரன்

விஜய் சேது­ப­தியை வைத்­துப் படம் இயக்க காத்­தி­ருக்­கி­றார் இயக்­கு­நர் சேரன். எனி­னும் காலம் அதற்கு வழி­வி­டுமா எனத் தெரி­ய­வில்லை என்று அண்­மைய டுவிட்­டர் பதி­வில் அவர் கவலை தெரி­வித்­துள்­ளார். 

‘திரு­ம­ணம்’ படத்தை அடுத்து தமது அடுத்த படைப்­புக்­காக தயா­ராகி வந்­தார் சேரன். அதற்­கான கதை­யைப் பல முன்­னணி நடி­கர்­க­ளி­டம் கூறு­வ­தற்கு அவர் நேரம் கேட்­டும் யாரும் அதற்கு முன்­வ­ர­வில்லை. 

பல­ரும் தம்மை அலட்­சி­யப்­ப­டுத்­தி­ய­தாக வேதனை தெரி­வித்­தி­ருந்­தார். மேலும் அவ­ருக்­குப் பணப்­பி­ரச்­சி­னை­யும் அதி­க­மாக இருந்­தது. 

இந்­நி­லை­யில் சேர­னின் இக்­கட்­டான நிலை குறித்து கேள்­விப்­பட்ட விஜய் சேது­பதி அவ­ரது இயக்­கத்­தில் நடிக்க தாமாக முன்­வந்து கால்­ஷீட் ஒதுக்­கி­யுள்­ளார். இதை­ய­டுத்து சேது­ப­தி­யின் இந்த உத­வி­யைத் தம்­மால் வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாது எனக் கூறி­வந்­தார் சேரன். 

இடை­யில் சேது­ப­தி­யின் அறி­வு­ரையை ஏற்றே ‘பிக்­பாஸ்’ நிகழ்ச்­சி­யில் தாம் பங்­கேற்­ற­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். சேது­பதி-சேரன் கூட்­ட­ணி­யில் புதுப்­ப­டத்­துக்­கான பணி­கள் சூட்­டோடு சூடா­கத் துவங்­கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், இது­வரை அப்­படி எது­வும் நடக்­க­வில்லை. 

இந்நிலையில் சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் டுவிட்டரில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதற்கு சேரன் பதிலளித்துள்ளார்.

“’தவமாய் தவமிருந்து’ போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியுடன் இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை அமைந்துள்ளது. ஆனால், ஏனோ அதைச் செய்துமுடிக்க இயலாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இது அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழிவிடுமா காலம்?” எனத் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார் சேரன்.