ராஷ்மிகா: நம் பலமாக மாற்றிக் கொள்வோம்

இன்­றைய சூழ்­நி­லை­யில் மனி­தர்­க­ளாக இருப்­ப­து­தான் பாது­காப்­பின்மை என்­கி­றார் இளம் நாயகி ராஷ்­மிகா மந்­தனா.

இவ­ரைப் பற்றி நாள்­தோ­றும் ஏதே­னும் ஒரு தக­வல் தெலுங்கு ஊட­கங்­களில் வெளி­யா­கிறது. ராஷ்­மி­கா­வும் விடா­மல் ஊட­கங்­க­ளுக்­குத் தீனி போட்டு வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் கொரோனா கிருமி விவ­கா­ரத்­தால் பல­ரும் பாது­காப்­பற்ற சூழ்­நி­லையை உணர்­வ­தாக கூறி வரு­வ­தைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், திரை­யு­ல­கில் தாம் எதிர்­கொண்ட பாது­காப்­பற்ற சூழல் குறித்து சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

“பாது­காப்­பின்மை என்­றால் நிச்­ச­ய­மற்ற தன்மை அல்­லது அதிக ஏக்­கத்­து­டன் இருப்­பது என்று பொரு­ளாம். இதை நான் சொல்­ல­வில்லை.கூக­ளில் இப்­ப­டித்­தான் பாது­காப்­பின்மை எனும் வார்த்­தைக்­கான அர்த்­தத்தை விவ­ரிக்­கி­றார்­கள்.

“என்­னைக் கேட்­டால் ஒரு படி மேலே சென்று மனி­த­னாக இருப்­ப­து­தான் பாது­காப்­பின்மை என்­பேன். இன்­றைய தேதி­யில் நாம் பல விஷ­யங்­கள் குறித்­துப் பேசு­கி­றோம். பாது­காப்­பற்ற நிலை­யில் இருப்­ப­தா­கச் சொல்­கி­றோம்.

“நம்­மைப் பற்­றியோ அல்­லது பிற­ரைப் பற்­றியோ அல்­லது ஏதே­னும் மோச­மான விஷ­யம் குறித்தோ யோசிக்­கும்­போது ஒரு­வித பாது­காப்­பற்ற தன்­மையை உணர்­கி­றோம்.

“எனி­னும் ஒரு கட்­டத்­துக்­குப் பிறகு நாம் யோசிப்­பது, தூங்­கு­வது, செயல்­ப­டு­வது உள்­ளிட்ட அனைத்­துமே அர்த்­த­மற்­ற­தா­கத் தோன்­றும்,” என்­கி­றார் ராஷ்­மிகா.

சிலர் நம்­மைப் பற்றி சாதா­ர­ண­மாக விசா­ரித்­தா­லும்­கூட நாம் அது­கு­றித்து அதி­கம் யோசிப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், சிறு விஷ­யங்­கள் குறித்து தேவை­யின்றி யோசித்து பாது­காப்­பற்ற சூழ்­நி­லை­யில் இருப்­ப­தாக நமக்கு நாமே கற்­பனை செய்­வது தேவை­தானா? எனக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இதற்­கான உதா­ர­ணங்­க­ளை­யும் அவர் தமது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில் விவ­ரித்­துள்­ளார்.

“எனது உடல் எடை கூடி­விட்­டதா? ஒல்­லி­யா­கத் தெரி­கி­றேனா, எனது சரு­மம் (தோல்) வறண்­டு­விட்­டதா அல்­லது அதிக எண்­ணெய்த் தன்­மை­யு­டன் இருக்­கி­றதா என்­றெல்­லாம் நமக்கு நாமே பல­வி­த­மாக கேள்­வி­களை எழுப்­பிக் கொள்­கி­றோம்.

“யாரே­னும் ஒரு­வர் நீண்ட நாட்­க­ளுக்­குப் பிறகு நம்­மைச் சந்­திக்­கும்­போது, ‘உன் முகத்­துக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்­டால், அத்­தோடு முடிந்­தது கதை.

“பத்து நாட்­க­ளுக்கு முக்­காடு போட்­டுக் கொள்­கி­றோம். என்­னைப் பொறுத்­த­வரை இதெல்­லாம் தேவை­யற்­றது,” என்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

கொரோனா ஊர­டங்கு வேளை­யில் தானும் பாது­காப்­பற்ற தன்­மையை உணர்­வ­தாக குறிப்­பி­டு­ப­வர் வேலை, திரை­யு­ல­கப் பணி, புறத்­தோற்­றம், மன ஆரோக்­கி­யம் என அனைத்து விஷ­யங்­கள் குறித்த கவ­லை­கள் தமக்­கும் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

“எனவே நம்­மால் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய விஷ­யங்­க­ளைப் பற்றி மட்­டும் கவ­லைப்­ப­டு­வோம். நமக்கு இருக்­கும் பாது­காப்­பற்ற தன்­மையை நமது பல­மாக மாற்­றிக் கொள்­வோம்.

“நீங்­கள் கறுப்­பாக இருக்­கி­றீர்­கள். ஒல்­லி­யாக இருக்­கி­றீர்­கள். உங்­கள் கண்­கள் பெரி­தாக இருக்­கின்­றன என யாரா­வது கூறி­னால் அதை சரி என்று எடுத்­துக் கொள்­ளுங்­கள்.

“உங்­கள் மீது நம்­பிக்கை வையுங்­கள். நம்மை நாமே நம்­பா­விட்­டால் வேறு யார் நம்­பு­வார்­கள். இறு­தி­வரை போராடுங்­கள்,” என்று ராஷ்­மிகா மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

தன்­னம்­பிக்கை இழந்து கவ­லை­யில் இருக்­கும் பல­ருக்­கும் ராஷ்­மி­கா­வின் இந்­தப் பதிவு நம்­பிக்­கை­யூட்டி இருப்­ப­தாக பல­ரும் பாராட்­டி­யுள்­ள­னர்.

அது­மட்­டு­மல்ல, சக நடி­கை­கள் சில­ரும் கூட கச்­சி­த­மான பதிவு என்று கருத்து தெரி­வித்­த­ன­ராம். இதே போல் மேலும் சில நடி­கை­கள் சமூக வலைத்­த­ளங்­களில் நம்­பிக்­கை­யூட்­டும் வகை­யில் பதி­விட்டு வரு­கின்­ற­னர். இவற்­றுக்கு எதிர் கருத்­து­களும் எழு­கின்­றன. இருந்­த­போ­தி­லும் திரைக் கலை­ஞர்­கள் அவற்­றைக் கண்டு கொள்­வ­தில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!