லட்சம் பேருக்கு உணவளிக்கும் பிரணிதா

திரை­யு­ல­கத்­தி­னர் ஏழை எளி­ய­வர்­க­ளுக்­குச் செய்­து­வ­ரும் உத­வி­கள், அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டும் பதி­வு­கள் பெரும் வர­வேற்­பைப் பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் நடிகை பிர­ணிதா தின­மும் ஒரு லட்­சம் பேருக்கு உண­வ­ளிக்­கும் நல்ல காரி­யத்­தில் தன்னை ஈடு­ப­டுத்­திக் கொண்­டுள்­ளார்.

இவர் ஏற்­கெ­னவே தன் பெய­ரில் அறக்­கட்­டளை ஒன்­றைத் துவங்கி ஆத­ர­வற்­ற­வர்­க­ளுக்­கும் ஏழை­க­ளுக்­கும் உதவி செய்து வரு­கி­றார் என்­பது தெரிந்த விஷ­யம்­தான். ஆனால், தொடக்­கத்­தில் 100, 200 பேருக்கு உண­வ­ளித்த நிலை மாறி தற்­போது ஒரு லட்­சம் பேருக்கு இவ­ரது உத­விக்­க­ரம் நீண்­டுள்­ளது.

பிர­ணி­தா­வின் பெற்­றோர் இரு­வ­ருமே மருத்­து­வர்­கள் என்­ப­தால் மகள் சினி­மா­வில் நடிப்­ப­தில் இரு­வ­ருக்­குமே உடன்­பாடு இல்­லை­யாம். நடிக்க வேண்­டாம் என்று குடும்­பத்­தார் வலி­யு­றுத்­தி­யும்­கூட எப்­ப­டியோ சமா­ளித்து திரை­யில் முகம் காட்­டி­யுள்­ளார்.

ஆனால், முதல் படத்­தில் நடித்து முடித்­த­துமே நிலைமை மாறி­விட்­ட­தாம். அதன்­பி­றகு எந்­தச் சிக்­க­லு­மின்றி இவ­ரது திரைப்­ப­ய­ணம் சென்று கொண்­டி­ருக்­கிறது.

“கன்­ன­டத்­தில் நான் நடித்த முதல் படம் தமி­ழில் வெளி­யான ‘போக்­கிரி’யின் மறு­ப­திப்பு. தமி­ழில் அசின் நடித்த கதா­பாத்­தி­ரத்தை நான் ஏற்­றி­ருந்­தேன். அதன்­பி­றகு தமிழ், தெலுங்கு என்று பல படங்­களில் நடித்­தாகி விட்­டது.

“இந்­தி­யில் நான் நடித்த ‘The Pride of India’ படம் ஆகஸ்ட் மாதம் வெளி­யாக இருந்­தது. ஆனால், ஊர­டங்கு கார­ண­மாக அது சாத்­தி­ய­மா­க­வில்லை,” என்று வருத்­தத்­து­டன் குறிப்­பி­டும் பிர­ணிதா மேலும் ஒரு இந்­திப் படத்­தில் ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளார். அதை பிரி­ய­தர்­ஷன் இயக்­கு­கி­றா­ராம்.

ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்ட பிறகு வீட்­டி­லேயே முடங்­கிக் கிடப்­பது ஒரு­வ­கை­யில் எரிச்­சல் ஊட்­டி­ய­தாம். மேலும் வரு­மா­ன­மின்றி ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் சிர­மப்­ப­டு­வதை நினைத்­த­போது வருத்­த­மா­க­வும் இருந்­த­தாம். இத­னால் அவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் ஏதா­வது செய்­ய­வேண்­டும் என்று நினைத்­த­தா­கச் சொல்­கி­றார் பிர­ணிதா.

“ஏதோ நம்­மால் முடிந்த உத­வி­யைச் செய்­வோம் என்று நினைத்து துவங்­கி­யது இன்று அதிக பொறுப்­பு­க­ளைக் கொடுத்­தி­ருக்­கிறது. தின­மும் ஒரு லட்­சம் பேருக்கு உண­வுப் பொருட்­கள், உணவு கொடுத்து வரு­கி­றோம்.

“எனது பெய­ரி­லான அறக்­கட்­டளை மூலம் நிறைய நல்ல விஷ­யங்­கள் நடந்து வரு­கின்­றன. கடந்­தாண்டு கேர­ளா­வில் வெள்­ளம் ஏற்­பட்­ட­போது அறக்­கட்­டளை சார்­பாக ஒரு குழு அங்கு நேரில் சென்று உதவி மற்­றும் மீட்­புப் பணி­களை மேற்­கொண்­டது.

“பெற்­றோர் இரு­வ­ருமே மருத்­து­வர்­கள் என்­ப­தால் குடி­சை­வாழ் பகுதி மக்­க­ளுக்­காக கிரா­மப்­பு­றங்­களில், குடி­சைப் பகு­தி­களில் மருத்­துவ முகாம் நடத்­தி­னோம்.

“அர­சுப் பள்­ளி­களில் பயி­லும் ஏழை மாண­வர்­க­ளுக்கு நான் ஆங்­கி­லம் கற்­பிக்­கும் வகுப்­பு­களை நடத்­தி­னேன். குறிப்­பாக ஆட்டோ ஓட்­டும் தொழி­லா­ளர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு அனைத்து வகை­யி­லும் உதவி செய்து வரு­கி­றோம்,” என்று சொல்­லும் பிர­ணிதா, தனது அறக்­கட்­ட­ளை­யின் வெற்­றி­க­ர­மான செயல்­பாட்­டிற்கு தாம் மட்­டுமே கார­ணம் என்று சொல்ல முடி­யாது என தன்­ன­டக்­கத்­தோடு குறிப்­பி­டு­கி­றார். பல­ரும் இவ­ரது அறக்­கட்­ட­ளைக்கு நிதி­ய­ளித்து வரு­வ­தா­க­வும் அவற்­றைக் கொண்டே ஏழை­க­ளுக்கு உதவ முடி­வ­தா­க­வும் கூறு­கி­றார்.

“மருத்­துவ உத­வி­கள் ஏழை­க­ளுக்கு மிக அவ­சி­யம். அதில் கூடு­தல் கவ­னம் செலுத்துகிறோம். பேரி­டர் போன்ற சம­யங்­களில் நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் இயன்ற வகை­யில் பிற­ருக்கு உதவ வேண்­டும். இப்­ப­டிப்­பட்ட உத­வி­கள்­தான் வாழ்க்­கை­யில் நம்மை உயர்த்­தும். படப்­பி­டிப்­பு­கள் துவங்கி மீண்­டும் பர­ப­ரப்­பாக இயங்­கி­னா­லும் எனது இந்த சமூக சேவை­கள் தொட­ரும்,” என்கி­றார் பிர­ணிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!