கனகாம்பரம் சூடிய நந்திதா

நகரத்துப் பெண், கிராமத்துப் பெண் என இரண்டு விதமான தோற்றங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்துவார் நடிகை நந்திதா ஸ்வேதா.

எனினும் தமிழ்நாட்டுக் கலாசாரத்தில் ஊறிய பெண்ணாக வட்டார மொழி பேசி நடிப்பதைத்தான் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்களாம்.

இந்நிலையில் தமக்குப் பிடித்தமான பூவைத் தலையில் சூடியிருப்பதாகக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் நந்திதா. மல்லிகைப்பூ சூடியிருப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது.

கனகாம்பரத்துடன் குடும்பப்பாங்காக காட்சியளிக்கிறார் நந்திதா. தமக்குப் பிடித்த கனகாம்பரம் தனது ரசிகர்களில் எத்தனை பேருக்கு பிடித்திருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.