இணையத்தில் வெளியாகிறது ‘டைட்­டா­னிக் காத­லும் கவிழ்ந்­து­ போகும்’

சி.வி. குமார் தயா­ரிப்­பில் ஜானகி­ரா­மன் இயக்­கி­யுள்ள படம் ‘டைட்­டா­னிக் காத­லும் கவிழ்ந்­து­ போகும்’.

கலை­ய­ர­சன், ஆனந்தி, ராகவ் விஜய், ஆஷ்னா ஜாவேரி, காளி வெங்­கட், மது­மிதா உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர். நிவாஸ் கே பிரசன்னா இசை­ய­மைத்­துள்­ளார்.

இப்­ப­டத்­தின் பணி­க­ளைக் குறித்த நேரத்­தில் முடித்­து­விட்ட போதி­லும் வெளி­யி­டு­வ­தில் சில சிக்­கல்­கள் ஏற்­பட்­ட­ன­வாம். குறிப்­பாக கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட படங்­களில் இது­வும் ஒன்று என்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிடு­வ­தற்­கான பேச்­சு­வார்த்தை துவங்­கி­யி­ருப்­ப­தா­கத் தக­வல்.

அனே­க­மாக அடுத்த சில தினங்­களில் பேச்­சு­வார்த்தை முடி­வுக்கு வரும் என்­றும் அதை­யடுத்து இம்­மாத இறு­திக்­குள் படம் இணை­யத்­தில் நேர­டி­யாக வெளி­யீடு காணும் என்­றும் படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

படத்தின் தலைப்பைப் போலவே கதையும் திரைக்கதையும் மிக வித்தியாசமாக இருக்கும். இது அனைத்துத் தரப்பினருக்குமான படம் என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.