நம்­மைச் சுற்றி நடப்­பதை நாம் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது - டாப்சி

எப்­படி உங்­க­ளால் வீட்­டில் அமை­தி­யாக முடங்­கிக் கிடக்க முடி­கிறது?

அண்­மைய சில வாரங்­க­ளாக டாப்­சி­யு­டன் தொலை­பேசி­யில் தொடர்புகொண்டு பேசும் அனை­வ­ரும் தவ­றா­மல் கேட்­கக்­கூ­டிய கேள்வி இது­தா­னாம். அனை­வ­ருக்­கும் பொறு­மை­யாக பதில் சொல்­லிக் கொண்­டி­ருக்­கும் டாப்சி தமக்­கும்­கூட இவ்­வாறு இருப்­பது ஆச்­ச­ரி­யம் அளிப்­ப­தாக சொல்­கி­றார்.

“கடந்த இரு ஆண்­டு­க­ளாக காலில் இறக்கை கட்­டிக்­கொண்டு பறக்­காத குறை­தான். ஆண்­டுக்கு நான்­கைந்து படங்­களில் நடித்து முடித்­தி­ருக்­கி­றேன். ஒரு­வேளை இந்த ஆண்­டும் எல்­லாம் திட்­ட­மிட்­ட­படி நடந்­தி­ருக்­கு­மா­னால் ஆறேழு படங்­களில் நடித்து முடித்­தி­ருக்க வாய்ப்­புண்டு.

கொரோனா கிரு­மித் தொற்று எல்­லா­வற்­றை­யும் மாற்­றி­ய­மைத்து விட்­டது,” என்­கி­றார் டாப்சி.

நாட்­டில் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­போது எப்­படி சமா­ளிக்­கப் போகி­றோம் என்று முத­லில் யோசித்­தா­ராம். இப்­போ­தெல்­லாம் தின­மும் ஒன்­பது மணி நேரங்­க­ளுக்கு குறை­யா­மல் தூங்­கு­கி­றா­ராம்.

கைவ­சம் ஐந்து இந்­திப் படங்­களை வைத்­துள்­ளார் டாப்சி. தவிர ஜெயம் ரவி ஜோடி­யாக தமி­ழி­லும் ஒரு படத்­தில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். ஊர­டங்கு முடி­வுக்கு வந்­த­தும் எப்­படி, யாருக்கு கால்­ஷீட் கொடுப்­பது எனும் குழப்­பம் இப்­போதே தலை­தூக்கிவிட்­ட­தாம்.

கவர்ச்சி நாய­கி­யாக அறி­யப்­பட்ட டாப்­சியை திற­மை­யான நடிகை என்று பெயர் வாங்க வைத்­தது ‘பேபி’ திரைப்­ப­டம்­தான்.

“தென்­னிந்­திய மொழி­களில் பல படங்­கள் நடித்­தி­ருக்­கி­றேன். குறிப்­பாக தெலுங்­கில் நான் கவர்ச்சி நாய­கி­யா­கவே அறி­யப்­பட்­டேன். தொடக்­கத்­தில் பெரிய நாய­கி­யாக வேண்­டும் என்­றால் இது­தான் சரி­யான பாதை என்று நினைத்­தி­ருந்­தேன். பிற­கு­தான் நான் நினைப்­ப­தைச் சாதிக்க இந்த வழி உத­வாது என்­பதை உண­ர­மு­டிந்­தது.

“பாதையை மாற்­றத் தீர்­மா­னித்த போது­தான் ‘பேபி’ பட வாய்ப்பு கிடைத்­தது. சிறிய கதா­பாத்­தி­ரம் என்­றா­லும் ரசி­கர்­கள் என்னை வித்­தி­யா­ச­மான முறை­யில் நினை­வில் வைத்­தி­ருக்க முடி­யும் என்று தோன்­றி­ய­தால் அதில் நடித்­தேன்,” என்­கி­றார் டாப்சி.

அதன்­பி­றகு ‘பிங்க்’ முதல் அண்­மைய வெளி­யீ­டான ‘தப்­பட்’ வரை டாப்சி ஏற்று நடித்த ஒவ்­வொரு கதா­பாத்­தி­ர­மும் ரசி­கர்­க­ளால் உன்­னிப்­பா­கக் கவ­னித்­துப் பேசப்­பட்­டன.

உங்­க­ளைப் பற்­றிய விமர்­ச­னங்­களை எப்­படி எதிர்­கொள்­வீர்­கள்?

“விமர்­ச­னங்­கள் என்று வரும்­போது கல­வை­யான கருத்­து­கள் இருக்­கவே செய்­யும். என்­னைப் பொறுத்­த­வரை அனைத்­தை­யும் நேர்­மறை சிந்­த­னை­யு­டன் அணு­கு­கி­றேன். நான் யாரை­யும் மாற்ற முயற்­சிக்­க­வில்லை. நான் நடிக்­கும் படங்­களும் கதா­பாத்­தி­ரங்­களும் ஒரு கலந்­து­ரை­யா­ட­லைத் துவக்கி வைக்க வேண்­டும் என்­பது மட்­டுமே எனது விருப்­பம். அதைத்­தான் செய்­து­வ­ரு­கிறேன்.

“மாற்­றம் என்­பது இயல்­பாக வர­வேண்­டும். பொது­வாக நான் அதி­கப்­ப­டி­யான சுறு­சு­றுப்­பு­டன் அமை­தி­யற்­றுக் காணப்­ப­டு­வேன். ஆனால் இந்த ஊர­டங்கு என்னை மாற்­றி­யுள்­ளது. என்­னி­டம் காணப்­படும் அமைதி என்­னையே ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது. விமர்­ச­னங்­கள் இருப்­பது எப்­போ­துமே நல்­லது,” என்­கி­றார் டாப்சி.

இந்த ஊர­டங்கு வேளை­யில் ரசி­கர்­க­ளுக்கு என்ன அறி­வுறுத்த விரும்­பு­கி­றீர்­கள்?

“நாம் நாளை என்ன நடக்­கும் என்­ப­தைப் பற்றி யோசிப்­ப­தில் பல­னில்லை. ஒவ்­வொரு நாளையும் நாம் எதிர்­கொள்ள வேண்­டும்.

“நம்­மைச் சுற்றி நடப்­பதை நாம் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அப்­படி இருக்­கும்­போது எதற்­காக மற்ற விஷ­யங்­களை நினைத்து அச்­சமோ கோபமோ கொள்­ள ­வேண்­டும்? எதற்­காக மன அழுத்­தத்­துக்கு ஆளா­க­வேண்­டும்?

“இன்று நம்­மி­டம் என்ன இருக்­கி­றதோ அதை வைத்து இன்­றைய பொழு­தைக் கடத்­த­வேண்­டும். சுருக்­க­மா­கச் சொன்­னால், இன்­றைய வாழ்க்கை நம் கையில் உள்­ளது. அதைச் சிறப்­பாக வாழ வேண்­டும்,” என்­கி­றார் டாப்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!