சத்யராஜ் மீண்டும் நாயகனாக நடிக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்'

‘தீர்ப்­பு­கள் விற்­கப்­படும்’ என்ற தலைப்­பு­டன் கோடம்­பாக்­கத்­தில் களம் இறங்­கி­யுள்­ளார் அறி­முக இயக்­கு­நர் தீரன். இதில் சத்­ய­ராஜ் கதா­நா­ய­க­னாக நடிக்­கி­றார்.

தீர­னைச் சந்­திக்­கும் பல­ரும் இப்­ப­டி­யொரு தலைப்பை வைத்­தி­ருக்­கி­றீர்­களே என்று கேட்­கி­றார்­க­ளாம். அவரோ, இது­போன்ற தலைப்­பு­கள் தமிழ் சினி­மா­வுக்கு ஒன்­றும் புதி­தில்­லையே என்று பதில் கேள்வி எழுப்­பு­கி­றார்.

“சத்­ய­ராஜ் சார் ஏற்­கெ­னவே ‘தீர்ப்­பு­கள் திருத்­தப்­ப­ட­லாம்’ என்ற தலைப்­பில் நடித்­தி­ருக்­கி­றார். கடந்த 1980களில் ‘நீதிக்­குத் தண்­டனை’, ‘சட்­டம் ஒரு இருட்­டறை’ என்ற தலைப்­பு­களில் படங்­கள் வந்­துள்­ளன. அப்­போ­தெல்­லாம் படத்­தின் தலைப்பே அதில் பேசப்­பட்­டி­ருக்­கும் விஷ­யத்­தைச் சுட்­டிக்­காட்­டும். ஆனால், எனது படத்­தில் பேசப்­படும் விஷ­யம் இன்­னும் சற்று தீவி­ர­மா­னது,” என்­கி­றார் தீரன்.

இந்­தப் பட­மும் நீதி­யைப் பற்­றித்­தான் பேசு­கிறது என்­றா­லும் அதி­லும் ஒரு சின்ன மாற்­றம் இருப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், தனது படம் நீதி கேட்டு நீதி­மன்­றத்­துக்­குச் செல்­வ­தற்கு முன் உள்ள விஷ­யங்­க­ளைப் பேசும் என்­கி­றார்.

ஒரு­வ­கை­யில் மருத்­து­வம் சார்ந்த குற்­றங்­கள் தொடர்­பான திகில் படம் என்­று­கூட குறிப்­பி­ட­லாம். இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லி­யில் சில காட்­டு­மி­ராண்­டி­க­ளால் கசக்கி எறி­யப்­பட்ட மல­ரான நிர்­ப­யா­வின் வழக்­கு­தான் இந்­தக் கதைக்­கான உந்­து­தல் என்­கி­றார்.

கதைப்­படி சத்­ய­ராஜ் நேர்­மை­யான அரசு மருத்­து­வர். அவ­ரது மகள் மருத்­துவ மாணவி. திடீ­ரென அவ­ருக்கு மிகப்­பெ­ரிய பாலி­யல் கொடூ­ரம் நடக்­கிறது. ஒரு மருத்­து­வக் குடும்­பத்­துக்கு நடக்­கும் அநீ­திக்­குக்­கூட அவர்­கள் உரிய நீதி­யைப் பெற எத்­த­கைய போராட்­டத்தை எதிர்­கொள்ள வேண்டி இருக்­கிறது என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை. இது நான்கு மணி நேரத்­தில் நடக்­கும் ஒரு பழி­வாங்­கல் கதை என்­கி­றார் தீரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!