பசுமை சவால்: மரக்கன்றுகள் நட்டார் விஜய்

தெலுங்கு முன்­னணி நடி­கர் மகேஷ்­பாபு விடுத்த பசுமை சவாலை ஏற்று மரக்­கன்று நட்­டுள்­ளார் விஜய்.

சமூக வலைத்­த­ளங்­கள் மூலம் மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பிர­ப­லங்­கள் சிலர் அவ்­வப்­போது புதுப்­புது கருப்­பொ­ரு­ளு­டன் கூடிய சவால்­களை விடுப்­பது வழக்­க­மாகி உள்­ளது.

அந்த வகை­யில் பசுமை சவால் (Green Challenge) தற்­போது பிர­ப­ல­மாகி உள்­ளது.

இந்­தச் சவாலை விடுக்­கும் ஒருவர், தன் பங்­குக்கு மரக்­கன்­று­களை நட­வேண்­டும். பிறகு தன்­னைப்­போல் இந்­தச் சவாலை ஏற்­க­மு­டி­யுமா என்று மூன்று பேருக்கு அவர் அழைப்பு விடுக்­க­வேண்­டும்.

நடி­கர் மகேஷ்­பாபு அண்­மை­யில் நடி­கர்­ விஜய், தெலுங்கு நடி­கர் ஜூனி­யர் என்டிஆர், நடிகை ஷ்ரு­தி­ஹா­சன் ஆகிய மூவ­ருக்­கும் சவால் விடுத்­தார்.

இதை ஏற்று விஜய் சில மரக்­கன்றுகளை நட்­ட­து­டன் ‘இது உங்­க­ளுக்­காக மகேஷ் காரு’ என்று டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் தாம் மரக்­கன்று நடும் புகைப்­ப­டத்­தை­யும் காணொ­ளிப் பதி­வை­யும் அவர் வெளி­யிட்­டுள்­ளார். விஜய் ரசி­கர்­கள் இதை உற்­சா­கத்­து­டன் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர். நடி­கர்­கள் பிர­பாஸ், நாகார்­ஜுனா, நடிகைகள் சமந்தா, ராஷ்­மிகா மந்­தனா உள்­ளிட்ட பலர் இந்­தச் சவாலை ஏற்று மரக்­கன்­று­களை நட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே ‘மாஸ்­டர்’ படத்­தில் இடம்­பெ­றும் ‘க்விட் பண்ணுடா’ என்ற பாடலை சுதந்­திர தினமான 15ஆம் தேதியன்று வெளி­யிட அப்­ப­டக்­குழு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் ரசிகர்கள் மேலும் உற்­சா­க­ம் அடைந்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon