சுடச் சுடச் செய்திகள்

முத்தத்தால் வெடித்த சர்ச்சை

அண்­மை­யில் இணை­யத்­தொ­டர் ஒன்­றில் முத்­தக் காட்­சி­யில் நடித்­துள்­ளார் நித்யா மேனன். அது பெரும் சர்ச்­சை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

இப்­ப­டிப்­பட்ட காட்­சி­கள் எல்­லாம் தேவையா? என சமூக வலைத்­த­ளங்­களில் விமர்­ச­னம் எழுந்­துள்ள நிலை­யில், அந்­தத் தொட­ரைப் பார்க்­கா­ம­லேயே நித்­யா­வைக் குறை கூறு­வது நியா­ய­மல்ல என்­கிறது அவ­ரது தரப்பு.

இதற்கு முன்­பும் சினி­மா­வில் முத்­தக் காட்­சி­யில் நடித்­துள்­ளார் நித்யா.

“தற்­போது திரை­யு­ல­கில் எத்­த­கைய சவா­லான வேட­மாக இருந்­தா­லும் அதை துணிச்­ச­லாக ஏற்று நடிப்­பது நித்யா மேனன், அமலா பால் போன்ற சில நடி­கை­கள்­தான்.

“எனவே வீண் விமர்­ச­னங்­கள் குறித்து நித்யா கவலைப்­படமாட்­டார்,” என்­கிறது அவ­ரது தரப்பு.

கொரோனா கிரு­மித்­தொற்று அனைத்­துத் துறை­க­ளை­யும் பாதித்­துள்­ளது. கோடிக் கணக்­கா­னோ­ரைப் புலம்ப வைத்­தி­ருக்­கிறது.

இந்­நி­லை­யில் ஒட்­டு­மொத்த வாழ்க்­கை­யை­யும் கொரோனா கிருமி புரட்­டிப் போட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார் நடிகை நித்யா மேனன்.

தற்­போது வாழ்க்கை போராட்­டக் கள­மாக மாறி­யுள்­ளது என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அன்­றாட உண­வுக்­குக் கூட வழி­யின்றி மக்­கள் போரா­டு­வதை கண்­கூ­டா­கப் பார்க்க முடி­கிறது என்­றும் இத்­த­கைய விஷ­யங்­கள் மனதை பாதிக்­கின்­றன என்­றும் நித்யா கூறி­யுள்­ளார்.

“எங்­களை போன்­ற­வர்­கள் வேலை இல்­லா­மல் வீட்­டில் இருந்து போரா­டு­கி­றோம். ஆத­ர­வற்­ற­வர்­கள் ஏதும் செய்ய இய­லா­மல் தவிக்­கின்­ற­னர்.

“இந்த உல­கில் எல்­லா­ருமே ஏதே­னும் ஒரு­வகை­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றை எதிர்த்து போரா­டிக் கொண்­டு­தான் இருக்­கி­றோம்,” என்­கி­றார் நித்யா.

ஊர­டங்கு கார­ண­மாக வீட்­டி­லேயே முடங்­கிக் கிடப்­பது சலிப்பை ஏற்­ப­டுத்­து­வது இயல்­பு­தான் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அதை­யும் மீறி இப்­போது கிடைத்­துள்ள ஓய்வு நேரத்தை பய­னுள்­ள­தாக மாற்­றிக்­கொள்ள வேண்­டும் என அறி­வு­றுத்­து­கி­றார்.

“இந்த ஓய்வு நேரத்தை நம்­மைப் பற்றி நாமே தெரிந்துகொள்ள பயன்­ப­டுத்­த­லாம்.

“குறிப்­பாக நமது செயல்­பா­டு­களை எந்­த­வித பார­பட்­ச­மும் இன்றி சுய விமர்­ச­னம் செய்து பார்ப்­போம். அதன் மூலம் நம்­மி­டம் உள்ள குறை­களைக் களை­ய­லாம்.

“அந்த வகை­யில் நான் மற்­ற­வர்­க­ளுக்கு மட்­டும் அறி­வுரை சொல்­லா­மல், எனக்­குள் இருக்­கும் குறை­க­ளைக் கண்­ட­றிந்­துள்­ளேன். நிச்­ச­ய­மாக அவற்­றைப் போக்­கு­வ­தற்கு உரிய நடவடிக்கை­களை மேற்­கொள்­வேன்,” என்­கி­றார் நித்யா.

காலஞ்­சென்ற முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாற்­றுப் பட­மாக உரு­வா­கும் ‘தி அயர்ன் லேடி’ படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருப்­ப­வர், நிஜ வாழ்க்­கை­யை­யும் சினி­மா­வை­யும் தாம் என்­றுமே ஒன்­றா­கக் கரு­தி­ய­தில்லை என்­கி­றார்.

“என்­னைப் பொறுத்­த­வரை சினிமா என்­பது முற்­றி­லும் வேறு­பட்ட தளம். படப்­பி­டிப்­புக்­குச் சென்­றால் அங்­குள்ள பணி­களை மட்­டுமே கவ­னிப்­பேன். அந்த வேலையை வீட்­டுக்­குள் சுமந்து வர­மாட்­டேன்.

“அதே­போல் படப்­பி­டிப்பு அரங்­கில் அடி­யெடுத்து வைத்துவிட்­டால் எனது சொந்த வாழ்க்­கை­யில் உள்ள கஷ்ட நஷ்­டங்­கள் குறித்து யோசிக்க மாட்­டேன். என் மனப் பாரத்தை தொழில் மீது சுமத்­து­வ­தில் எனக்கு விருப்­ப­மில்லை,” என்று யதார்த்­த­மா­கப் பேசு­கி­றார் நித்யா.

இது­வரை சினி­மா­வில் தாம் ஏற்று நடித்­துள்ள கதா­பாத்­தி­ரங்­கள் சில விவ­ரிக்க இய­லாத தாக்­கத்தை தம்­மி­டம் ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அத்­த­கைய சில கதா­பாத்­தி­ரங்­கள் இனம்­பு­ரி­யா­த­ மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தா­கச் சொல்­கி­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon