‘எந்தக் கதையையும் நாயகர்களிடம் முழுமையாக சொன்னதில்லை’

‘புறம்­போக்கு’ படம் வெளி­யாகி கிட்­டத்­தட்ட ஐந்து ஆண்­டு­க­ளாகி விட்­டன. இப்­போ­து­தான் அடுத்த படத்தை இயக்கி வரு­கி­றார் இயக்­கு­நர் எஸ்.பி. ஜன­நா­தன்.

வழக்­கம்­போல் இதி­லும் சமூக விவ­கா­ரங்­க­ளைத்­தான் அல­சி­யுள்­ளார். விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­க­ளை­யும் அதற்­கான பின்­னணி குறித்­தும் அல­சு­கிறது இவ­ரது புதிய படைப்­பான ‘லாபம்’.

விவ­சா­யி­கள் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தா­கக் கூறி பணம் சம்­பா­திப்­பதே திரைத்­து­றை­யி­ன­ரின் வழக்­க­மாக உள்­ளது என்று விமர்­சிக்­கப்­ப­டு­வதை மறுக்­கி­றார் ஜன­நா­தன்.

குறைந்­த­பட்­சம் தமக்கு அந்த நோக்­கம் இல்­லை­யென தெளி­வு­படுத்­து­கி­றார்.

“என்னை மட்­டுமே முன்­வைத்து விளக்­கம் அளிக்­கி­றேன். லாபம் சம்­பா­திப்­ப­தற்கு என்­னால் வேறு மாதி­ரி­யான படங்­களை எடுக்­க­ முடி­யும்.

“எனது பூர்­வீ­கம் தஞ்சை மாவட்­ட­மாக இருந்­தா­லும் சென்­னை­யில்­தான் வளர்ந்­தேன். அத­னால் விவ­சா­யம் குறித்து எது­வுமே தெரி­யாது. சிறு­வ­யது முதலே நிறைய திரைப்­ப­டங்­கள் பார்த்து வரு­கி­றேன்.

“சாதிச் சண்டை, பங்­கா­ளிச் சண்டை என்று பல­வற்­றைப் பற்றி சினி­மா­வில் பேசு­கி­றார்­கள். ஆனால், விவ­சா­யம் குறித்­துப் பேசக்­கூ­டிய படைப்­பு­கள் அதி­க­மில்லை. விவ­சாயி சிர­மப்­ப­டு­கி­றான் என்­கிற ரீதி­யி­லும் விவ­சா­யி­க­ளுக்கு அறி­வுரை கூறும் வகை­யி­லும்­தான் படங்­கள் வந்­துள்­ளன.

“ஆனால், இவற்­றைக் கடந்து பேசு­வ­தற்கு நிறைய விஷ­யங்­கள் உள்­ளன. இப்­போது அதைத்­தான் நான் செய்­தி­ருக்­கி­றேன்,” என்­கிறார் ஜன­நா­தன்.

இந்த உல­கத்­துக்­குத் தேவை­யான உணவு மட்­டு­மல்ல, பல விஷ­யங்­கள் கிரா­மத்­தி­லி­ருந்­து­தான் கிடைக்­கிறது என்று சுட்­டிக்­காட்டு ­ப­வர், இப்­ப­டிப்­பட்ட ஒரு படத்தை முன்பே இயக்­கி­ இருக்­க­லாம் என்று தோன்­று­வ­தா­கச் சொல்­கி­றார். அதற்­கான கார­ணத்­தை­யும் விவரிக்கிறார்.

“காலை­யில் இருந்து கரும்பு வெட்­டும் விவ­சாயி, வேலையை முடித்­து­விட்டு உடல் வலியை மறப்­ப­தற்­காக மது அருந்­து­கி­றார். ஆனால், அந்த மது கரும்­பி­ல் இருந்து­தான் எடுக்­கப்­பட்­டது என்­பது அவ­ருக்­குத் தெரி­யாது. பருத்­திக் கொட்­டை­யில் இ­ருந்­து­தான் வனஸ்­பதி வரு­கிறது என்­பது அதற்­குப் பெயர் பெற்ற ராஜ­பா­ளை­யத்து மக்­க­ளுக்கே தெரி­ய­வில்லை.

“உணவு மட்­டு­மல்ல, உல­கத்­துக்­குத் தேவை­யான எல்லா மூலப்­பொ­ருட்­களும் கிரா­மத்­தி­லி­ருந்­து­தான் வரு­கின்­றன. ஆனால், இதை­யெல்­லாம் கொடுக்­கும் விவ­சா­யிக்கு என்ன கிடைக்­கிறது? இந்­தக் கேள்­வி­யைத்­தான் ‘லாபம்’ படம் எழுப்­பு­கிறது,” என்­கி­றார் ஜன­நா­தன்.

இது­வரை தாம் இயக்­கிய படங்­க­ளின் முழுக்­க­தை­யை­யும் கதா­நா­ய­கர்­க­ளி­டம் விவ­ரித்­த­தில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், படம் துவங்­கும் வரை தமக்கே முழுக்­க­தை­யும் தெரி­யாது என்­கி­றார்.

படப்­பி­டிப்பு தொடங்­கி­விட்ட பிற­கும்­கூட கதையை மெரு­கேற்­றிக்­கொண்டே இருப்­பா­ராம்.

“இன்­றைக்கு புதி­தா­கத் தோன்­றும் விஷ­யம் படம் வெளி­யா­கும்­போது பழை­ய­தா­கி­வி­டும். என­வே­தான் எதை­யும் இறு­தி­யா­னது என்று நான் வகைப்­ப­டுத்­து­வ­தில்லை. இதைப் புரிந்­து­கொண்­ட­வர்­கள்­தான் என் படத்­தின் நாய­கர்­க­ளாக இருப்­பார்­கள். ஷாம், ஜீவா, ஜெயம் ரவி எல்­லோ­ருக்­குமே அந்­தப் புரி­தல் இருந்­தது. விஜய் சேது­ப­தி­யும் அப்­ப­டித்­தான்,” என்று சொல்­லும் ஜன­நா­தன், ‘லாபம்’ படத்­தின் நாய­கி­யாக ஷ்ரு­தி­ஹா­சனை நடிக்க வைக்­கும் எண்­ணம் தமக்­குத் தொடக்­கத்­தில் அறவே இல்லை என்­கி­றார்.

தயா­ரிப்­பா­ளர் கேட்­டுக்கொண்­ட­தால்­தான் ஷ்ரு­தி­யைச் சந்­தித்து கதை சொன்­னா­ராம்.

“உண்­மை­யைச் சொல்­ல­வேண்­டு­மா­னால் ஷ்ருதி நடிக்க ஒப்­புக்­கொள்­வாரா எனும் சந்­தே­கம் இருந்­தது. ஆனால் கதை­யைக் கேட்ட பிறகு நடிப்­ப­தா­கச் சொன்­னார்.

“கதைப்­படி அவ­ருக்கு நட­னக்­கலை­ஞர் வேடம். கதை நாய­க­னின் தியா­கத்­தை­யும் அர்ப்­ப­ணிப்­பை­யும் பார்த்து அவ­ரைக் காத­லிப்­பார்,” என்­கி­றார் ஜன­நா­தன்.

‘லாபம்’ படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­பில் இடம்­பெற்­றுள்ள வச­னங்­கள் அதி­ர­டி­யாக இருப்­ப­தாக பல­ரும் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

தன் மன­துக்கு நியா­யம் என்று தோன்­றிய கருத்­து­க­ளைத்­தான் முன்­வைத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கிறார் ஜன­நா­தன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon