அமலாவின் தேடல்கள்

‘ஆடை’ படத்துக்குப்­பின் ஆளே மாறிப்­போய்­விட்­டார் அமலா பால். வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம், வித­வி­த­மான கதா­பாத்­தி­ரங்­கள் என ‘மைனா’வின் மனசு தேட­லில் தீவி­ர­மாக இருந்து வரு­கிறது.

சொந்த வாழ்க்­கை­யி­லும் சுவா­ர­சி­ய­மான விஷ­யங்­க­ளைத் தேடித்­தி­ரி­கி­றார்.

பாம்பு சட்டை உரிப்­ப­து­போல, தன் நட்­சத்­திர படி­மத்தை உத­றி­விட்டு, தோழமை வட்­டத்­து­டன் மலை­யேற்­றம், அடர் வனங்­களில் கிடைக்­கிற பொருட்­களை உண்டு நாடோடி (ஜிப்ஸி) வாழ்க்கை மேற்­கொள்­வது என தீவி­ர­மா­கத்­தான் இருக்­கிறது அம­லா­வின் தேடல்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பே, இயற்கை மீது பற்­று­கொண்டு, அதனை ஆழ்ந்து ரசித்து சிந்­திக்­கும் ஞானம் அம­லா­வுக்கு வந்­து­விட்­ட­தாம்.

‘திருட்­டுப்­ப­யலே-2’ படப்­பி­டிப்­பிற்­காக தாய்­லாந்து சென்­றி­ருந்த சம­யம், ஒரு­நாள் சொல்­லா­மல் கொள்­ளா­மல் ஒரு சிறிய படகை வாட­கைக்கு எடுத்­துக்­கொண்டு அடர்­கா­டு­க­ளின் வழியே பாய்ந்து செல்­லும் பெரு­ந­தி­யில் சென்­றி­ருக்­கி­றார்.

அது ஆபத்­தான பகுதி, ஆபத்­தான பய­ணம் என்­ப­த­றிந்து பத­றிப்­போய், படக்­கு­ழு­வைச் சேர்ந்­த­வர்­கள் அம­லாவை மீட்டு வந்­தார்­கள்.

வாடி­கன், இம­ய­மலை, திரு­வண்­ணா­மலை, தியா­னம் என சம­யங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு அமை­தி­யை­யும் அவ்­வப்­போது தேடிச் செல்­கிறது இந்த ‘மைனா’வின் மனசு.

ஜீவ­கா­ருண்­யத்­தில் சிறந்­த­வர்­க­ளாகத்­தான் இருக்­கி­றார்­கள் செல்­லப்­பி­ரா­ணி­களை வளர்க்­கும் நடி­கை­கள். அதி­லும் அமலா பால் ஒரு­படி மேலே­தான்.

தன் வீட்­டில் நாயு­டன் பூனை ஒன்­றை­யும் வளர்த்து வரு­கி­றார் அமலா. கேர­ளா­வி­லுள்ள தன் வீட்­டில் அமலா ஓய்­வெ­டுக்­கச் செல்­லும்­போ­தெல்­லாம் அவ­ரு­டன் மட்­டுமே இருக்­கும் அந்­தப் பூனை. அதை அமலா கொஞ்­சும் அழ­கைப்­பார்த்து ரசிக மன­சு­கள் பொறா­மை­யில் தங்­க­ளுக்­குள் மெல்­லியதாய் ‘மியாவ்’ சத்­தமே போடு­கி­றார்­கள்.

எதை­யும் புது­மை­யா­கச் செய்­யும் அமலா, தாம் முதன்­மு­த­லாக தயா­ரிப்­பா­ள­ராக (இணைத் தயா­ரிப்­பா­ளர்) ஆகி­யி­ருக்­கும் படத்­தை­யும் வித்­தி­யா­ச­மா­கத்­தான் தேர்வு செய்­தி­ருக்­கி­றார். கடந்த ஏப்­ரல் மாதம் படத்­திற்கு பூசை போட்­டா­லும்­கூட படப்­பிடிப்பு இன்­னும் முடி­ய­வில்லை. எனி­னும் படத்­திற்­கான முன் - பின் தயா­ரிப்­புப் பணி­கள் நடந்து கொண்டே இருக்­கின்­றன.

“என் கையில் இப்­போது பணம் இல்லை. படத்­தயா­ரிப்­புக்­காக முத­லீடு செய்­து­விட்­டேன்,” என அண்­மை­யில் சொல்லி இருந்­தார் அமலா. கார­ணம், இது சிக்­க­ன­மாக எடுக்­கக்­கூ­டிய கதை­யம்­சம் கொண்ட பட­மல்ல. செலவு பிடிக்கும் படம்.

படத்­திற்­குப் பெயர் ‘கேட­வர்’. மலை­யா­ளத்­தில் தயாரித்து சில மொழி­களில் மாற்­றம் செய்­யத் திட்­ட­மாம்.

‘கேட­வர்’ என்­றால் ‘உயி­ரற்ற உடல்’ என்று பொருள். இதில் அமலா ’தட­ய­வி­யல், நோயி­யல் நிபு­ணர் மருத்­து­வர் பத்ரா’ எனும் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். அம­லா­வு­டன் இதில் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் அதுல்யா ரவி, ஹரீஷ் உத்­த­மன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்­ப­ராஜ் (ராட்­ச­சன் புகழ்) மற்­றும் சிலர் நடிக்­கி­றார்­கள்.

கேர­ளா­வின் காவல்­து­றை­யில் பணி­யாற்­றிய, மிக­வும் பிர­ப­ல­மான தடய அறுவை சிகிச்சை நிபு­ண­ரான டாக்­டர் உமா பத்­தன் கடந்த ஆண்டு கால­மா­னார்.

அவர் தனது பணிக்­கால அனு­ப­வங்­களை வைத்து எழு­திய ‘ஒரு போலிஸ் சர்­ஜ­னோடே ஓர்ம குறிப்­பு­கள்’ என்ற புத்­த­கத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டு­தான் அமலா தயா­ரிக்­கும் படம் எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

இதற்­காக அந்­தப் புத்­த­கத்தை பல­முறை முழு­மை­யா­கப் படித்­த­து­டன், அந்­தப் பணி­யைப் பற்­றிய மேலும் நுணுக்­க­மான அறி­வைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபு­ண­ரி­டம் சில நாட்­கள் பயிற்­சி­யும் பெற்று கதா­பாத்­தி­ரத்­திற்கு தயா­ரா­னா­ராம்.

“எங்­கள் நோக்­கம் தெளி­வாக உள்­ளது. நல்ல கதை மற்­றும் தயா­ரிப்­பில் தரத்தை உயர்த்­து­வ­தற்கு இன்­னும் பல படங்­களில் இணைந்து பணியாற்றுவது என உறு­தி­யாக உள்­ளோம்.

“இயக்­கு­நர் அனூப் பணிக்­கர் மற்­றும் திரைக்­கதை எழுத்­தா­ளர் அபி­லாஷ் பிள்ளை ஆகி­யோர் திரைக்­க­தை­யில் தங்­கள் முழு உழைப்பை காட்­டி­யுள்­ள­னர்.

“அவர்­க­ளின் முன் தயா­ரிப்பு முயற்சி­க­ள் மூலம் குறித்த நேரத்­தில் படப்­பி­டிப்பை முடித்து விடு­வோம். படத்­தில் நான் ஒரு புதிய தோற்­றத்­தில் தோன்­று­வேன். ரசி­கர்­க­ளுக்கு அது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தும்,” என நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார் அமலா.

நடி­கை­யாக இருந்து தயா­ரிப்­பா­ள­ராக ஆகி­யி­ருக்­கும் அமலா பால், அடுத்­த­தாக பெண்­க­ளின் மன­நி­லையை வைத்து ஒரு கதையை உரு­வாக்கி வரு­வ­தா­கத் தக­வல். இதற்­காக உல­கத்­தில் பிர­ப­ல­மான பெண்­கள் சம்­பந்­தப்­பட்ட புத்­த­கங்­களை படித்­துக்­கொண்­டி­ருக்­கி­றா­ராம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon