டுவிட்டரில் சாதனை புரிந்த செல்ஃபி

டுவிட்டரில் சாதனை புரிந்த செல்ஃபி

1 mins read
50e8cf72-d11c-4029-ab9e-0b8028c3416e
ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட 'செல்ஃபி'. -

நடி­கர் விஜய் தன் ரசி­கர்­க­ளு­டன் சேர்ந்து எடுத்­துக்­கொண்ட 'செல்ஃபி' படம் புதிய சாதனை படைத்­துள்­ளது.

டுவிட்­ட­ரில் அதி­கம் பேரால் பகி­ரப்­பட்ட பதிவு என்­பதே அந்­தச் சாதனை. இதற்கு முன்பு இந்தி நடி­கர் ஷாருக்­கான் வெளி­யிட்ட ஒரு பதி­வு­தான் டுவிட்­ட­ரில் முத­லி­டத்­தில் இருந்­தது.

தற்­போது அதைப் பின்­னுக்­குத் தள்­ளி­விட்டு முத­லி­டம் பிடித்­துள்­ளது விஜய்­யின் பதிவு.

'மாஸ்­டர்' படத்­தின் படப்­பிடிப்பு நடந்து கொண்­டி­ருந்­த­போது விஜய் வீட்­டில் திடீ­ரென வரு­மான வரித்­துறை சோதனை நடந்­தது. இதை­ய­டுத்து நெய்­வே­லி­யில் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றி­ருந்த அவரை வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் சென்­னைக்கு வர­வ­ழைத்­த­னர். சோதனை முடிந்த பிறகே அவர் படப்­பி­டிப்­பில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­பட்­டார்.

இத்­த­க­வல் வெளி­யா­னதை அடுத்து நெய்­வே­லி­யில் படப்­பி­டிப்பு நடந்த பகு­தி­யில் ஏரா­ள­மா­னோர் கூடி­னர். இதை­ய­றிந்த விஜய், ரசி­கர்­களை நோக்கி கைய­சைத்து உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­து­டன் அங்­கி­ருந்த ஒரு பேருந்­தின் மீது ஏறி நின்று ரசி­கர்­க­ளு­டன் 'செல்ஃபி' படம் எடுத்­துக் கொண்­டார்.

இதைப் பின்­னர் அவர் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டார். அதை ரசி­கர்­கள் மட்­டு­மன்றி, பிர­ப­லங்­கள் பல­ரும் பகிர்ந்­ததை அடுத்து இந்­தப் புதிய சாதனை சாத்­தி­ய­மாகி உள்­ளது.