‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்டம்

‘மாஸ்­டர்’ படம் குறித்து தின­மும் ஏதா­வது ஒரு தக­வல் வெளி­யான வண்­ணம் உள்­ளது.

ஆனால், அவற்­றுள் பெரும்­பா­லான தக­வல்­கள் வெறும் வதந்­தி­க­ளா­கவே உள்­ளன.

குறிப்­பாக ‘மாஸ்­டர்’ நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கும் என்ற தக­வல் தொடர்ந்து உலா வரு­கிறது.

ஆனால், ரசி­கர்­கள் அதை நம்­ப­வேண்­டாம் என படத்­தின் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

‘மாஸ்­டர்’ திரை­ய­ரங்­கில்­தான் வெளி­யா­கும் என்­றும் இதில் எந்­த­வித மாற்­ற­மும் இல்லை என்­ப­தால் இதுதொடர்­பான கேள்­வி­களை மீண்­டும் தம்­மி­டம் எழுப்­ப­வேண்­டாம் என்­றும் அவர் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் கோவை­யில் விஜய் நற்­பணி இயக்­கம் சார்­பில் நடை­பெற்ற நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்­வில் கலந்­து­கொண்டார் லோகேஷ். அப்போது பேசிய அவர், திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டி­ருப்­ப­தால் ஏரா­ள­மா­னோர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

“திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­ட­வு­டன் ‘மாஸ்­டர்’ வெளி­யா­கும். இந்த நிலைப்­பாட்­டில் எந்­த­வித மாற்­ற­மும் இல்­லை­யென உறு­தி­யா­கச் சொல்­ல­மு­டி­யும்.

“திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டால்­தான் பல­ரது வாழ்­வா­தா­ரங்­கள் மீட்­டெ­டுக்­கப்­படும். எனவே ‘மாஸ்­டர்’ படத்தை இணை­யத்­தில் நேர­டி­யாக வெளி­யி­டும் எண்­ணமே இல்லை,” என லோகேஷ் கன­க­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, இணை­யம் வழி புதுப்­ப­டங்­களை வெளி­யிட நடி­கர் விஷ்ணு விஷால் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார்.

மாற்­றங்­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றும் அவற்­றின் மூலம் புதி­ய­வற்­றைக் கற்­றுக்­கொண்டு வளர்ச்சி காண­வேண்­டும் என்­றும் அவர் சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

‘மாஸ்டர்’ பட நிகழ்வில் விஜய், லோகேஷ் கனகராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!